Samantha: ஸ்டைல் குயினாக ஜொலிக்கும் சமந்தா.. கூட பூனைக்குட்டி வேறயா!

சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தன்னை ரசிகர்களிடையே நிலைநிறுத்தியுள்ளார்.

திருமணம், விவாகரத்து, காதல் சர்ச்சை என எவையும் தன்னுடைய சினிமா கேரியரை பாதிக்காத வகையில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் வெப் தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சமந்தா.

Actress Samantha shared her recent photoshoot pictures in Instagram

நடிகை சமந்தா: நடிகை சமந்தா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார். விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ள சமந்தா நடிப்பில் சமீபத்தில் குஷி படம் வெளியானது. விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருந்த இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியானது. படம் ரசிகர்களை கவர்ந்து சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது.

அடுத்தடுத்த வெப் தொடர்கள்: தற்போது பாலிவுட்டிலும் அடுத்தடுத்த வெப் தொடர்களில் நடித்து வரும் சமந்தா முன்னதாக டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான இந்தி ரசிகர்களை மட்டுமில்லாமல் இந்திய ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தற்போது இவர்களது இயக்கத்திலேயே சிட்டாடல் தமிழ் வெர்ஷனில் நடித்துள்ளார். இதனிடையே தனக்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார்.

சினிமாவில் ஓய்வு: தொடர்ந்து 6 மாத காலங்கள் சினிமாவில் இருந்து இடைவெளி எடுக்கவுள்ளதாக சமந்தா கூறிய நிலையில் அமெரிக்காவில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்ட வீடியோக்களை பகிர்ந்திருந்தார். ஆனால் 6 மாத காலங்கள் நிறைவடைவதற்கு முன்னதாகவே அவரை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள், பிட்னஸ் வீடியோக்களை அவர் பகிர்ந்து வருகிறார். தன்னடைய கிளாத்திங் பிராண்டை பிரமோட் செய்யும் வகையில் அடுத்தடுத்த போட்டோஷுட்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

மார்வெல் நிகழ்ச்சியில் சமந்தா: இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற மார்வெல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா, ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் ஸ்லிஷ்ஷாக ஜீன்ஸ், டாப்ஸ் மற்றும் ஜாக்கெட்டுடன் காணப்பட்டார் சமந்தா. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சமந்தாவின் இன்டர்வியூ ஆகியவை சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டானது. மார்வெல்ஸ் படத்தின் லீட் ரோலுக்கு சமந்தா டப்பிங் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமந்தா புதிய போட்டோஷுட்: இந்நிலையில் இந்த அவுட்பிட்டில் சமந்தா போட்டோஷுட்டும் எடுத்துள்ளார். இதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஷுட்டில் கூலர்ஸ் சகிதம் காணப்பட்ட சமந்தா, தன்னுடைய வீட்டின் புதிய வரவான பூனைக்குட்டி சகிதம் போஸ் கொடுத்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால் இந்தப் புகைப்படங்களை பிளாக் -அண்ட் வொயிட்டில் அவர் பதிவு செய்துள்ளார். அதிலும் அவரது அழகு மிளிர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X