Samantha :மீண்டும் சிகிச்சையில் சமந்தா.. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம்!
ஐதராபாத் : நடிகை சமந்தா இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் கட்டிப் போட்டவர்.
தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அடுத்தடுத்த வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூலிலும் சொதப்பியது.

மீண்டும் சிகிச்சையில் சமந்தா : நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக உள்ளார். இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சாகுந்தலம் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் சொதப்பியது. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான யசோதா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் வாடகைத்தாயாக செயல்பட்டு, பெரிய அளவில் நடக்கும் மோசடியை சமந்தா கண்டுபிடிப்பதாக கதைக்களம் அமைந்திருந்தது. தன்னுடைய தங்கைக்காக இந்த விஷயத்தில் இறங்கும் சமந்தா, எப்படி ஒவ்வொரு விஷயமாக திறமையாக செயல்பட்டு, குழந்தைகளை கருவிலேயே குலைக்கும் கும்பலை கண்டறிகிறார் என்பதாக அந்தக் கதை அமைந்திருந்தது. ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது.

நாக சைத்தன்யாவுடன் திருமணம், 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கை, பிரிவு அறிவிப்பு, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சமந்தா, தன்னுடைய கேரியரை மட்டும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து சிறப்பாக பராமரித்து வந்துள்ளார். மயோசிட்டிஸ் நோய் பாதிப்பில் இருந்தபோதிலும், யசோதா, சாகுந்தலம் படங்களில் பிரமோஷன்களில் அவர் தன்னை பிசியாக ஈடுபடுத்திக் கொண்டார். ஒருபுறம் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.
தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடித்துவரும் சமந்தா, அதற்கென லண்டனில் நடைபெற்ற பிரீமியர் ஷோவில் வருண் தவானுடன் இணைந்து பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இருவரின் கெமிஸ்ட்ரியும் மிகவும் சிறப்பாக பேசப்பட்டது. கருப்பு நிற உடையில் கலக்கலாக கலந்துக் கொண்டார் சமந்தா. இந்நிலையில் தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக தான் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆக்ஸிஜன் மூலம் அளிக்கப்படும் இந்த சிகிச்சைக்கான புகைப்படத்தைதான் சமந்தா பகிர்ந்துள்ளார். ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சையைத்தான் அவர் தற்போது எடுத்துக் கொள்கிறார். இந்த சிகிச்சை மூலம் வீக்கத்தை குறைக்கவும் நோய் தொற்றுக்களை குணப்படுத்தவும் சேதமடைந்த திசுக்களை சரிசெய்யவும் முடியும். இந்த சிகிச்சை மயோசிட்டிஸ் நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்நிலையில் சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில் இந்தப் புகைப்படம் அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











