Samantha: உதட்டை குவித்து நாக்கால் பழிப்பு காட்டும் சமந்தா.. உருகிப் போன ரசிகர்கள்!
சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் அடுத்தடுத்து படங்கள், வெப் தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா சிறிது காலங்களாக படங்களில் நடிக்காமல் தன்னுடைய உடல்நல பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டு வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போஸ்ட்களை பகிர்ந்து வருகிறார் சமந்தா. அவரை இன்ஸ்டாகிராமில் 35 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து பல பதிவுகளையும் தன்னுடைய சுற்றுப் பயணங்களை பகிர்ந்து வருகிறார் சமந்தா.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சமந்தா, தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதேபோல இந்தியில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அவர்களுடைய இயக்கத்திலேயே தொடர்ந்து சிட்டாடல் வெப் தொடரிலும் சமந்தா நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சமந்தா: கடந்த ஆண்டில் சமந்தா -விஜய் தேவரகொண்டா கூட்டணியில் வெளியானது குஷி படம். இந்தப் படத்துடன் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் தன்னுடைய நோய் பாதிப்பிற்காக இடையில் சில மாதங்கள் நடிப்பிலிருந்து விலகியிருந்தார் சமந்தா. இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க தற்போது அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அடுத்தடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பல போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நீச்சல் உடைகளிலும் அவரது அடுத்தடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமை அழகாக்கி வருகின்றன. இந்நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் 35 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.
புதிய புகைப்படங்கள்: இந்நிலையில் தற்போது சமந்தா தன்னுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அனைத்திலும் மிகவும் அழகான அவுட்பிட்டுடன் சமந்தாவை பார்த்த ரசிகர்கள், அப்படியே உருகித்தான் போனார்கள். ஒரு புகைப்படத்தில் உதட்டை குவித்து பழிப்பு காட்டியபடி காணப்பட்டார் சமந்தா. அடுத்தடுத்த வித்தியாசமான உடைகளில் அவரை பார்த்த ரசிகர்கள், அப்படியே இருப்பதாக கமெண்ட் செய்ததுடன், அடுத்தப்பட அறிவிப்பு எப்போது என்றும் கேள்வி கேட்க துவங்கியுள்ளனர்.
ஈஷா மையத்தில் சமந்தா: தற்போது கோவை ஈஷா யோகா மையத்தில் சமந்தா உள்ளார். இங்கு தான் தியானம் செய்யும் புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதையொட்டி அவர் நமக்கு ஞானம் வேண்டுமென்றால் அதை நாம் தான் தேட வேண்டும் என்றும் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவை ஈஷா யோகா மையத்திற்கு சமந்தா அடிக்கடி செல்வதை பார்க்க முடிகிறது. மனதளவில் எத்தனை பிரச்சினைகளையும் சந்தித்து மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் சமந்தா மீண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு யோகா போன்ற விஷயங்கள் அவருக்கு உறுதுணையாக அமைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











