அடுத்தடுத்த புகைப்படங்கள்.. வெள்ளை உடையில் தேவதையாக ஜொலிப்பு.. ஆனாலும் பழைய ஸ்மைல் மிஸ்ஸிங்!

ஐதராபாத் : நடிகை சமந்தா தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

யசோதா கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. பாலிவுட்டிலும் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் புதிய வெப் தொடரிலும் கமிட்டாகியுள்ளார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சமந்தா திருமணம், நாக சைத்தன்யாவுடன் பிரிவு மற்றும் மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஆகியவற்றால் தன்னுடைய கேரியர் பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொண்டார். தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பிலிருந்து சிறிது சிறிதாக மீண்டுவரும் சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

சூப்பர் ஹிட்டடித்த யசோதா படம்

சூப்பர் ஹிட்டடித்த யசோதா படம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா என்ற படம் வெளியானது. சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எதிலும் தன்னுடைய மனதிற்கு பிடித்த நடிகையை பார்க்க முடியாத ரசிகர்களுக்கு ஆறுதலாக யசோதா படம் அமைந்தது. இந்தப் படத்தின் கதை மற்றும் சமந்தாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்தப் படம் சமந்தாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது.

சாகுந்தலம் பட ரிலீஸ்

சாகுந்தலம் பட ரிலீஸ்

ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள சாகுந்தலம் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தில் நடிக்க முதலில் தான் பயந்ததாகவும் பின்பு டைரக்டர்கள் உள்ளிட்டவர்கள் கொடுத்த நம்பிக்கையில் இந்தப் படத்தை சவாலாக ஏற்றுக் கொண்டு தான் நடித்ததாகவும் தற்போது இந்த கேரக்டர் சிறப்பாக வந்துள்ளதாகவும் சமந்தா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரமோஷன்களில் படக்குழு

பிரமோஷன்களில் படக்குழு

சாகுந்தலம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களின் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை சமந்தா வெளியிட்டு வருகிறார். மேலும் தனிப்பட்ட முறையில் அடுத்தடுத்த போட்டோஷுட்களையும் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். யசோதா படத்தின் ரிலீசின்போது சமந்தா, நோய் பாதிப்பில் இருந்த நிலையில், அவரால் அதிகமாக பிரமோஷன்களில் ஈடுபட முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை நிற தேவதை

வெள்ளை நிற தேவதை

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் சுடிதாருடன் போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. இயல்பான லுக்கில் இந்தப் புகைப்படங்கள் இருந்தாலும் அவரது முகத்தில் காணப்படும் அந்த அழகான ஸ்மைல் மிஸ்ஸிங் என்றுதான் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சமந்தா, தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து மீண்டு, மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X