நம்பிக்கைதான் எல்லாம்.. கடவுள் முன்பு தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!
சென்னை : நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகின்றன.
சமந்தாவின் வாழ்க்கையில் விவாகரத்து, அரியவகை நோய் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்சினைகளை அவர் சந்தித்து வருகிறார்.
தற்போது தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. சமூக வலைதளங்களிலும் பிசியாகியுள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்கள், வெப் தொடர்களில் கமிட்டாகி நடித்து வருபவர். 13 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய திரைப்பயணத்தை ரசிகர்களின் அதிகப்படியான சப்போர்ட்டுடன் தொடர்ந்து வருகிறார் சமந்தா. சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக இருக்கும் சமந்தாவை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

விவாகரத்து முடிவு
பிசியான நடிகையாக இருந்தபோதே தெலுங்குப்படவுலகின் நாயகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சமந்தா. இவர்களது திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தபோது, இருவரும் விவாகரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளதாக கூட்டாக அறிவித்தனர். இதனால் அவர்களது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சேர்த்து வைக்கும் குடும்பத்தினரின் முயற்சியும் கானல் நீரானது.

அடுத்தடுத்த பிரச்சினைகள்
தொடர்ந்து தன்னுடைய நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் இணைந்து நடித்தார். இந்நிலையில் அவருக்கு மயோசிட்டீஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிய சமந்தா, தான் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்தார். இந்த கடினமான காலகட்டத்தை சமந்தா கடந்துவர அவரது நண்பர்கள் மற்றும் ஆன்மீகம் அவருக்கு துணையாக அமைந்தது.

மீண்டும் படங்களில் பிசி
இந்நிலையில் தற்போது தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள சமந்தா, மீண்டும் குஷி படத்தின் சூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் மீண்டும் ஆக்டிவாக மாறியுள்ளார். தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையே தற்போது கடவுள் முன்பு தியானம் செய்யும்படியான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸடாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் நம்பிக்கை நம்மை எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லும் என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமந்தாவின் யசோதா படம் வெளியாகி சிறந்த விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக அவரது சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதனிடையே தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துவரும் சமந்தா, பாலிவுட்டில் 4 படங்கள் மற்றும் ஒரு வெப் தொடரிலும் கமிட்டாகியுள்ளார். ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ள சீட்டாடல் என்ற வெப் தொடருக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











