Actress Samantha: 2023ம் ஆண்டின் கடைசி ஒர்க்அவுட்.. ரசிகர்களை குஷியாக்கிய சமந்தா!
சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் சிறப்பான கேரக்டர்களில் நடித்தவர். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்தியிலும் தி பேமிலி மேன் 2 உள்ளிட்ட சீரிஸ்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அடுத்தடுத்த போட்டோஷுட்கள், பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
திருமணம், விவாகரத்து, நோய் பாதிப்பு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் மிகவும் தெளிவாக தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் செயல்பட்டு வருகிறார் சமந்தா. முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்திருந்தார் சமந்தா. இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து ஹிட் பட வரிசையில் இணைந்தது. கணவன் -மனைவி உறவுச்சிக்கல்களை இந்தப் படம் பேசியது.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் அதிகமான நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தியில் இவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கியிருந்தனர். இவர்களது இயக்கத்திலேயே சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்துள்ளார் சமந்தா. தன்னுடைய க்யூட் நடிப்பால் எராளமான ரசிகர்களை கட்டிப் போட்டுள்ள சமந்தா. தற்போது தன்னுடைய நோய் பாதிப்பு காரணமாக நடிப்பதிலிருந்து 6 மாதங்களுக்கு இடைவெளி எடுத்துள்ளார்.
வொர்க்அவுட் வீடியோ: இந்த கேப் ஏறக்குறைய பூர்த்தியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய் பாதிப்பால் இந்த கேப்பை எடுத்த நிலையிலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார் சமந்தா. அடுத்தடுத்த போட்டோஷுட்கள், வெளிநாட்டு பயணங்கள், தன்னுடைய படங்கள் குறித்த அப்டேட்கள், பிட்னஸ் வீடியோக்கள் என்று அடுத்தடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது புதிய வொர்க் அவுட் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டின் இறுதி வொர்க்அவுட் வீடியோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா உற்சாக புன்னகை: இந்த வீடியோவில் 25 கிலோ வெயிட்டை அவர் தூக்கியுள்ளதை பார்க்க முடிந்தது. தற்போது இந்த வீடியோ ஏராளமான ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எப்போதுமே தன்னுடைய உடல் எடையை சிறப்பாக பராமரித்து வரும் சமந்தா, அடுத்தடுத்த வொர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு ஏராளமான லைக்ஸ்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். 25 கிலோ எடையை தூக்கிய சந்தோஷத்தில் அவர் உற்சாக புன்னகையை கொடுத்ததையும் இநத் வீடியோவில் பார்க்க முடிந்தது.
சமந்தாவின் குஷி படம்: நடிகர் நாக சைத்தன்யாவுடன் பிரிவு அறிவிப்பை வெளியிட்டிருந்தார் சமந்தா. தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களிலும் சிக்கினார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவந்த நிலையில் அவருக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பலரின் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார் சமந்தா. ஆனால் இந்த பிரச்சினைகளில் இருந்து புன்னகையுடன் அவர் வெளியே வந்ததை பார்க்க முடிந்தது. சமீபத்தில் வெளியான குஷி படம் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே அவருக்கு உள்ள வரவேற்பு சற்றும் குறையவில்லை என்பது தெரிகிறது. தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











