சமந்தா வொர்க்அவுட் புகைப்படம்.. தொடர்ந்து மாஸ் காட்டும் குஷி நாயகி!
ஐதராபாத் : இந்திய அளவில் சிறப்பான நாயகியாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை சமந்தா.
தன்னுடைய நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள சமந்தா தற்போது குஷி படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். மீண்டும் பழைய சமந்தாவை பார்ப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் தன்னுடைய உடலை சிறப்பாக மாற்ற தொடர்ந்து வொர்க் அவுட் செய்துவரும் சமந்தா அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தன்னுடைய கேரியரில் 13 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ள சமந்தா, ரசிகர்களின் பேவரைட் நடிகைகளில் முக்கியமானவராக உள்ளார். தமிழிலும் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சமந்தா, தமிழ் பொண்ணு என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

13 வருட திரைப்பயணம்
இந்த 13 வருட கேரியரில் சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகமான பிரச்சினைகளை சந்தித்தாலும் பீனிக்ஸ் பறவை போல அதிலிருந்து மீண்டு வருகிறார் சமந்தா. இதன்மூலம் ரசிகர்களுக்கும் உத்வேகம் அளித்து வருகிறார். நாக சைத்தன்யாவுடன் பிரிவு அறிவிப்பு, மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்பு என கடந்த ஆண்டில் அவருக்கு அதிகமான சோதனைகள் ஏற்பட்ட நிலையில், அதிலிருந்து தற்போது மீண்டு, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது யசோதா படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்ற நிலையில், அடுத்ததாக சாகுந்தலம் என்ற படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சமீபத்தில் படத்தை பார்த்த சமந்தா, படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படம்
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைந்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக பாலிவுட்டில் 4 படங்களில் சமந்தா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தி பேமிலி மேன் 2 வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவின் அடுத்த வெப் தொடரிலும் சமந்தா கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீண்டு வந்துள்ள சமந்தா
மயோசிட்டிஸ் நோய் பாதிப்பிலிருந்து தற்போது மீண்டுள்ள சமந்தா, தன்னுடைய உடல்நலனை மிகுந்த கவனத்துடன் மீட்டெடுத்து வருகிறார். தொடர்ந்து வொர்க் அவுட், தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நோய் பாதிப்பில் அப்படியே முடங்கி விடாமல், மீண்டும் தன்னுடைய கேரியர், உடல்நலன் என கவனம் செலுத்திவரும் சமந்தா மற்றவர்களுக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். தற்போதும் தான் வொர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











