Smantha :பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வெளியிட்ட சமந்தா.. க்யூட் வீடியோ!

ஐதராபாத் : நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகையாக உள்ளார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சொதப்பியது.

அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

Actress Samantha shares Birthday celebration video in her Instagram page

சமந்தா பிறந்தநாள் கொண்டாட்டம் : நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளார். இவரது படங்கள், இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. யசோதா படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியானது சாகுந்தலம் படம். இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சொதப்பியது.

இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார் சமந்தா. ஆனால் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பறந்து பறந்து பிரமோஷனில் ஈடுபட்டார் சமந்தா. ஆனால் அந்தப் பிரமோஷன்கள் இந்தப் படத்திற்கு சரியாக கைக்கொடுக்கவில்லை.

Actress Samantha shares Birthday celebration video in her Instagram page

இந்தப் படத்தை தொடர்ந்து சமந்தாவின் மார்க்கெட்டில் சரிவு காணப்படுவதாக கூறப்படுகிறது. அவரது விவாகரத்து அறிவிப்பு, உடல்நலப் பிரச்சினை உள்ளிட்டவை அடுத்தடுத்து அவருக்கு பிரச்சினைகளை கொடுத்து வந்த நிலையில், அவற்றிலிருந்தெல்லாம் தன்னை மீட்டு, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தி பேமிலி மேன் 2 வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் மீண்டும் சமந்தா இணைந்துள்ள வெப் தொடர் சிட்டாடல். இந்த தொடரில் பிரீமியர் ஷோ லண்டனில் நடைபெற்ற நிலையில், வருண் தவானுடன் இணைந்து அதில் பங்கேற்றார் சமந்தா. கருப்பு நிற உடையில் இருவரும் இந்த ஷோவில் பங்கேற்ற நிலையில், இருவரும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக மாறினர்.

Actress Samantha shares Birthday celebration video in her Instagram page

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் சமந்தா, தற்போது தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடு இரவில் படக்குழுவினருடன் இணைந்து இந்தக் கொண்டாட்டத்தில் சமந்தா ஈடுபட்டிருந்தார். இந்த கொண்டாட்டத்தில் தான் நினைத்தது தனக்கு கிடைத்தததாக சமந்தா கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்களில் மிகவும் உற்சாகமாக அவர் காணப்படுகிறார்.

Actress Samantha shares Birthday celebration video in her Instagram page

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X