Samantha: இனிமேல்தான் நல்ல நேரம் வரப்போகுது.. சமந்தா ஆரூடம்!

சென்னை: நடிகை சமந்தா தென்னிந்திய அளவிலும் இந்தியிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

சமந்தா நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை அடுத்து படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார்.

Actress Samantha shows her confidence that best times yet to come

இந்நிலையில் சமந்தாவிற்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பு காரணமாக, அவர் அடுத்து ஒரு ஆண்டிற்கு நடிக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்ல நேரம் விரைவில் வரவுள்ளதாக சமந்தா நம்பிக்கை: நடிகை சமந்தா விஜய், சூர்யா, அதர்வா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றிப் படங்களை கொடுத்தவர். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து சமந்தா நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டிலும் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் தி பேமிலி மேன் 2 தொடரில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து சமந்தா நடிப்பில் யசோதா மற்றும் சாகுந்தலம் படங்கள் வெளியாகி சிறப்பாக அமைந்தன. சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Actress Samantha shows her confidence that best times yet to come

இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர் உள்ளிட்ட அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. காதலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

பாலிவுட்டில் மீண்டும் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சமந்தா. இதில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இந்தத் தொடரின் பிரீமியர் ஷோ லண்டனில் நடைபெற்ற நிலையில், சிறப்பான கெட்டப்புடன் வருண் தவான், பிரியங்கா உள்ளிட்டவர்களுடன் கலந்துக் கொண்டார் சமந்தா. இவரது உடை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

Actress Samantha shows her confidence that best times yet to come

இதனிடையே அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, முன்னதாக சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். அப்போது இவர் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இவர் படங்களில் நடிப்பதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார். இந்தமுறை ஒரு வருடம் இவர் படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பாலியில் இவர், தன்னுடைய சிகிச்சைக்கு முன்னதாக சில தினங்கள் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு இவர், தன்னுடைய தோழியுடன் இணைந்து தன்னுடைய கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அவருடன் இணைந்து நடன வீடியோ வெளியிட்டிருந்தார். குரங்குடன் இருவரும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக புகைப்படங்களை வெளியிட்டுவரும் சமந்தா, தற்போதும் சிறப்பான பேக்கிரவுண்டில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Samantha shows her confidence that best times yet to come

அழகழகான பேக்கிரவுண்டில் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. இந்தப் புகைப்படங்களில் அழகான ஸ்விம்மிங் பூல் அருகே அவர் புகைப்படங்களை எடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் இவர் தூங்குவதும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அழகான பூந்தோட்டங்கள், பழத்தோட்டங்கள், அழகான பிள்ளையார் ஆகியவற்றையும் தன்னுடைய கேமிராவில் சிறை பிடித்து ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். மேலும் இனிமேல்தான் நல்ல நேரம் வரப்போவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X