Actress Samantha: கலக்கல் உடையில் விமானநிலையத்திற்கு வந்த சமந்தா.. ட்ரெண்டாகும் வீடியோ!

சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். விளம்பரங்களிலும் பிசியாக காணப்படும் சமந்தா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் 33.5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து பிட்னஸ் வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவரும் சமந்தா, பிரபலங்களுடன் சந்திப்பு, பல முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்து வருகிறார்.

தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார் சமந்தா. தற்போது அதிலிருந்து மீண்டுள்ள சமந்தா, மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவை அனைத்தும் அதிகமான ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகின்றன. வித்தியாசமான உடைகளில் வித்தியாசமான பின்புலங்களில் சமந்தா வெளியிட்டுவரும் இந்தப்புகைப்படங்களில் அவரது க்யூட்னஸையும் ரசிகர்கள் பார்க்க முடிகிறது.

Actress Samantha spotted in Airport with cute look

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சர்வதேச அளவில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் சமந்தா விஜய், சூர்யா, விக்ரம் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா, நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான குஷி படம் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்தார் சமந்தா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் சிட்டாடல் வெப் தொடரின் இந்திய பதிப்பு விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த சீரிஸில் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா.

Actress Samantha spotted in Airport with cute look

சினிமாவிலிருந்து இடைவெளி: தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்த சமந்தா, இது தான் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு என்று முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடைய நோய் பாதிப்பு குறித்து பொதுவெளியில் வெளிப்படுத்தும் அழுத்தம் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்த சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே இன்ஸ்டாகிமில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் அள்ளி வருகிறார்.

Actress Samantha spotted in Airport with cute look

விமான நிலையத்தில் சமந்தா: தன்னுடைய உடல்நலன் மற்றும் மனநலனுக்காக தான் எப்போதுமே கவனம் செலுத்தியதில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருந்த சமந்தா, தினந்தோறும் 5 மணிநேரம் மட்டுமே தூங்குவேன் என்றும் கூறியிருந்தார். இதனிடையே படங்களில் நடிக்க கவனம் செலுத்திவரும் சமந்தா, அடுத்தடுத்த பயணங்களை மேற்கொண்டு வருகிறார். தற்போது டெல்லி சென்ற சமந்தாவின் விமான நிலைய வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் ஜீன்ஸ் மற்றும் அழகான வெள்ளை நிற டாப், கூலர்ஸ் சகிதம் மாஸ் காட்டியுள்ளார் சமந்தா.

Actress Samantha spotted in Airport with cute look

ரசிகர்கள் உற்சாகம்: பாரம்பரிய உடை மட்டுமில்லாமல் மாடர்ன் டிரஸ்ஸிலும் சிறப்பாக பொருந்தும் சமந்தாவிற்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை உள்ளனர். தன்னுடைய திருமணம், விவாகரத்து அறிவிப்பு, அதன்மூலம் ஏற்பட்ட சர்ச்சைகள், நோய் பாதிப்பு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் பார்த்துக் கொண்டார் சமந்தா. இருந்தபோதிலும் தனனுடைய உடல்நலனை மட்டுமில்லாமல் மனநலனையும் பராமரிக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அவர் மீண்டும் நடிக்க திரும்பியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X