Samantha: சமந்தா தலைக்கு என்ன ஆச்சு.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹனி!

பாந்த்ரா: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்கள் வெப் தொடர்களில் நடித்து வந்தவர். இவரது நடிப்பில் இறுதியாக குஷி படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. இடையில் தன்னுடைய உடல் நலத்தை பார்த்துக் கொள்வதற்காக சில மாதங்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட சமந்தா நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் ரிலீசாகவுள்ளது.

இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினருடன் இணைந்து சமந்தா மாஸ் காட்டி வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், பிட்னஸ் ட்ரெய்னிங் வீடியோக்கள் ஆகியவற்றால் நிரப்பி ஏராளமான ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

samantha tamil cinema

நடிகை சமந்தா: நடிகை சமந்தா இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக பல ஆண்டுகளாக வலம்வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சுற்றி சுற்றி நடித்து வந்த சமந்தா தற்போது மலையாள சினிமாவிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அடுத்ததாக பாலிவுட்டில் சமந்தாவின் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் ரிலீசாகவுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் சமந்தா, வருண் தவான் உள்ளிட்டவர்கள் இணைந்து கலக்கி வருகின்றனர். இந்த தொடரை முன்னதாக பேமிலி மேன் 2 தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர்: 2022ம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் இரண்டாம் பாகமாக இந்த தொடர் வெளியாக உள்ளது. இந்த தொடரின் ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியான நிலையில் அதில் அதிரடி சாகசம் செய்யும் சமத்தாவை பார்க்க முடிந்தது. தன்னுடைய மகளின் பாதுகாப்பிற்காக சமந்தா பறந்து பறந்து ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபடுவதாக இந்த ட்ரெய்லரில் காணப்பட்டது. இந்த தொடரில் ஹனியாக மாஸ் காட்டியுள்ளார் அவர். இதனிடையே வருண் தவானுடன் அவர் ரொமான்டிக் காட்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். நாக சைத்தன்யாவுடன் பிரிவு, தன்னுடைய உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்த சமந்தா தற்போது அவற்றிலிருந்து வெளிவந்துள்ளார்.

samantha tamil cinema

மும்பையில் சமந்தா: அடுத்தடுத்த படங்களில் படங்களில் நடிப்பதற்காக சமந்தா அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மிகச் சிறப்பான புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. இதனிடையே தற்போது மும்பையின் பாந்த்ராவில் சமந்தா பிரபல சலூன் முன்பு காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. கேஷுவல் உடையில் இந்த புகைப்படங்களில் சமந்தா காணப்படுகிறார். ஆனாலும் அவரிடம் புதிய மாற்றம் தென்பட்டுள்ளது. அவர் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். இந்த புதிய ஹேர்ஸ்டைலில் அவரது அழகு அள்ளுகிறது.

பிட்னஸ் வீடியோக்கள்: அவர் இந்த இடத்தில் வழக்கமாக ஹேர் ஸ்டைல் செய்து வருகிறார். முன்னதாகவும் அவர் இந்த இடத்தில் இருக்கும்படியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. சமந்தா எப்போதுமே தன்னுடைய அழகு, கவர்ச்சி உள்ளிட்டவற்றால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். இதனிடையே அவரது பிட்னெஸை மெயின்டைன் செய்வதற்காக அடுத்தடுத்து பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் வீடியோக்களையும் அவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உத்வேகமாக அமைந்து வருகிறார். தற்போது அவர் புதிய ஃபிட்னஸ் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

samantha tamil cinema

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X