விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை! ரிஷிகேஷில் தோழியுடன் மன நிம்மதி தேடும் சமந்தா!
சென்னை: விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட கையோடு நடிகை சமந்தா தோழியுடன் ரிஷிகேஷ் சென்றுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.
இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஷகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார் சமந்தா.

விவாகரத்து அறிவிப்பு
நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். இதேபோல் நாக சைதன்யாவும் சமந்தாவை பிரிவதாக அறிவித்தார். இருவரின் அறிவிப்பிலும் பெயர்கள் மட்டுமே மாறியிருந்தது.

ரிஷிகேஷில் ஓய்வு
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து சினிமா இண்டஸ்ட்ரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சமந்தா ரிஷிகேஷ் சென்றுள்ளார். அங்கு தனது தோழியுடன் ஓய்வை கழித்து வரும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை சமந்தா.

இன்ஸ்டாவில் போட்டோக்கள்
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை சமந்தா, மலையின் காட்சியுடன் வரும் எல்லையற்ற குளம், குரங்குகள், ஒரு பெரிய சிலந்தி வலை மற்றும் அவர் பார்த்த ஒரு பழைய மரம் ஆகியவற்றை ஷேர் செய்துள்ளார். மேலும் தான் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
நடிகை சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டியும் தாங்கள் ட்ரெக்கிங் சென்ற போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

கங்கை கரையோரம்
ரிஷிகேஷில் மன அமைதி தேடி வரும் சமந்தா, கங்கை கரையோரம் உள்ள லக்ஸரி ரிசார்ட்டில் தங்கியுள்ளார். முன்னதாக இந்த ரிசார்ட்டில் பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தங்கியிருந்தார். நடிகை சமந்தா ரிஷிகேஷில் எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லைக்ஸ்களை குவிக்கும் போட்டோஸ்
சமந்தாவின் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்றும் புதிய அத்தியாயத்தை தொடங்குங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டோக்களில் சமந்தா க்யூட்டாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். நடிகை சமந்தா பதிவிட்டுள்ள இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











