25 மில்லியன் பாலோயர்கள்.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : நடிகை சமந்தா இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த ஹீரோயினாக காணப்படுகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் கமிட்டாகி வருகிறார்.

சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோய் தாக்குதல் இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார். தற்போது குஷி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் மிகவும் ஆக்டிவாக தன்னுடைய போஸ்ட்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் சிறப்பான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சர்வதேச அளவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது யசோதா படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் வசூலிலும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது.

அரியவகை நோய் பாதிப்பு

அரியவகை நோய் பாதிப்பு

நாக சைத்தன்யாவுடனான விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்துவந்தார். அவரது நடிப்பில் யசோதா, சாகுந்தலம் படங்களும் ரிலீசுக்கு காத்திருந்தன. இந்நிலையில் சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் நடிப்பிலிருந்தும், சமூக ஆக்டிவிட்டிகளிலும் இருந்து விலகி, தீவிர சிகிச்சை மேற்கொண்டார்.

 சமந்தாவின் வெளிநாடு சூட்டிங்

சமந்தாவின் வெளிநாடு சூட்டிங்

அமெரிக்கா, கேரளா என அடுத்தடுத்த இடங்களில் சமந்தா சிகிச்சை மேற்கொண்ட நிலையில், தற்போது தன்னுடைய நோயிலிருந்து மீண்டு தேவரகொண்டாவுடன் தான் நடித்துவரும் குஷி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் சமந்தா, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த ஆக்டிவாக மாறியுள்ளார். முன்னதாக நோய் பாதிப்பு காரணமாக சில மாதங்கள் விலகியிருந்தார்.

25 மில்லியன் பாலோயர்கள்

25 மில்லியன் பாலோயர்கள்

சமந்தா எப்போதும் தன்னுடைய பிட்னசில் மிகுந்த அக்கறை கொண்டவர். அடுத்தடுத்த பிட்னஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தவர். இந்நிலையில், தற்போது சமந்தாவின் இத்தகைய வீடியோக்களை தொடர்ந்து காண முடிகிறது. இதனிடையே தற்போது இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் பாலோயர்களை சமந்தா பெற்றுள்ளார். இதையடுத்து இன்ஸ்டாவில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா.

சமந்தா புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சமந்தா புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சமந்தா இன்ஸ்டாகிராமில் மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மகிழ்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் அவரது முகம் மிகவும் டல்லாக காணப்படுகிறது. இதையடுத்து சமந்தாவா இது என்று ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது நோயிலிருந்து அவர் மீண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த புகைப்படம் ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கைகொடுக்கும் ரசிகர்கள்

கைகொடுக்கும் ரசிகர்கள்

சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளார் சமந்தா. இந்த 13 ஆண்டுகளிலும் தன்னுடைய கேரியரில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையிலும் அதிகமான போராட்டங்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி பீனிக்ஸ் பறவையாய் அவர் மீண்டு வருகிறார். அவரது ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு கைக்கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X