காரணமே இல்லாமல் ட்விட்டரில் திடீரென ட்ரெண்டான சமந்தா.. ரசிகர்கள் அன்பு போதாதா!

சென்னை : நடிகை சமந்தா இந்திய அளவில் தன்னை சிறப்பான நடிகையாக மாற்றிக் கொண்டுள்ளார். பல சிறப்பான படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Recommended Video

Naga Chaitanya Love | மீண்டும் காதலில் விழுகிறார் நாக சைதன்யா..

சமந்தாவின் வாழ்க்கையில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு ரசிகர்களிடையே காணப்படும் கிரேஸ் மட்டும் குறையவில்லை.

தற்போது இவரது நடிப்பில் யசோதா, குஷி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் சிறப்பான பல ப்ராஜெட்களில் கமிட்டாகி வருகிறார். தன்னுடைய திருமணம் விவாகரத்து முடிவு எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காதவண்ணம் தொடர்ந்து சிறப்பான பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

தன்னுடைய அழகு, கவர்ச்சியை தொடர்ந்து மெயின்டெய்ன் செய்து வருகிறார் சமந்தா. இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக காணப்படும் இவர் வொர்க் அவுட் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதில் கடந்த சில வாரங்களுக்கு எடைத்தூக்கும் பயிற்சியில் 100 கிலோ எடையை தான் தூக்கவுள்ளதாக மகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.

வொர்க் அவுட் வீடியோக்கள்

வொர்க் அவுட் வீடியோக்கள்

பயிற்சியாளருடன் இவர் பகிர்ந்த இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இவர் பல போட்டோஷுட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பகிர்ந்தார். தனிப்பட்ட முறையிலும் இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர்

அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர்

சமந்தா என்றாலே ரசிகர்களுக்கு மிகுந்த குஷிதான். அவர் காட்டும் கவர்ச்சி ஒருபுறம் அவர்களை வசீகரித்தாலும் அவரது அழகான சிரிப்பு மற்றும் இயல்பான நடிப்பும் அவரை கவர்ந்து வருகின்றன. தமிழில் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா ரசிகர்களை கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

ரோஸ்மில்க் டயலாக்

ரோஸ்மில்க் டயலாக்

குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்து வெளியான தெறி, மெர்சல் படங்களில் இவரது க்யூட் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. விஜய்யை பார்த்து மெர்சல் படத்தில் தம்பி ரோஸ்மில்க் வாங்கித் தரேண்டா என்று இவர் கூறிய டயலாக், விஜய் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைவரையும் கவர்ந்தது.

ரசிகர்கள் அன்பு

ரசிகர்கள் அன்பு

எப்போதுமே ரசிகர்களின் அன்பிற்குரியவராக இருந்து வருகிறார் சமந்தா. தற்போது இவர் யசோதா, குஷி படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படங்களின் ரிலீஸ் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் காரணமே இல்லாமல் ட்விட்டரில் திடீரென ட்ரெண்டானார் சமந்தா.

ட்ரெண்டான சமந்தா

ட்ரெண்டான சமந்தா

சமந்தா ஏன் ட்ரெண்டானார் என்று தேடி தேடி பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே பதிலாக கிடைத்தது. காரணம் எந்த காரணமும் இந்த ட்ரெண்டிங்கின் பின்பு இல்லை. ஆனால் சிறப்பான ஒரு காரணம் இருந்தது. அது ரசிகர்களின் அன்புதான். சமந்தாவின் பல படங்களை ஷேர் செய்து அவர்கள் அவரை ட்ரெண்டிங் செய்தனர்.

தளபதி 67ல் சமந்தா?

தளபதி 67ல் சமந்தா?

நடிகர் விஜய்யுடன் அடுத்ததாக தளபதி 67 படத்திலும் சமந்தா இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் சமந்தா வில்லி கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் மிகவும் பவர்புல்லாக இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதையடுத்தே சமந்தா கேரக்டர் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X