இதெல்லாம் தேவையா?.. அட்லீயை பங்கமாக கலாய்த்த சமந்தா.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியானது. அதில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே குட் ரெஸ்பான்ஸ் இருந்தது. அடுத்ததாக அவர் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவர் மும்பைக்கும் சென்றிருக்கிறார். இதற்கிடையே பிக்கிள் பால் லீக் தொடர் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தொடரில் சமந்தா ஒரு அணியை வாங்கியிருக்கிறார். இச்சூழலில் அட்லீயை அவர் கலாய்த்திருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் சமந்தா. விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதற்கு மாஸ்கோவின் காவிரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர் பாணா காத்தாடி படத்தின் மூலம் வெளிச்சம் பெற்றார். பிறகு தமிழில் அவர் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர் தெலுங்கிலும் கால் பதித்து அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார்.

samantha atlee

நாக சைதன்யாவுடன் திருமணம்: தெலுங்கில் அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் நாகார்ஜுனா சம்மதம் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்களது திருமணம் கோவாவில் வைத்து இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்தது.திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

பிரிவு: ஆனால் சமந்தா நடித்தது நாகார்ஜுனா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சமந்தா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு நாக சைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். அதற்கு காரணங்களாக பல்வேறு யூகங்கள் சொல்லப்பட்டன. முக்கியமாக சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் பிரிவுக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகின. சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். சமந்தா சிங்கிளாக இருக்கிறார்.

மீண்டும் பிஸி: இதற்கிடையே மையோசிடிஸ் நோய் காரணமாக சிகிச்சை பெற்றார் சமந்தா. அதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சாகுந்தலம் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. பிறகு குஷி படத்தில் நடித்தார். அதுவும் சரியாக போகவில்லை. கடைசியாக அவர் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். அது நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் சமந்தா பட்டையை கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் அவர். அதற்காக மும்பைக்கும் சென்றிருக்கிறார்.

அட்லீயை கலாய்த்த சமந்தா: ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருக்கும் சமந்தா மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். அதன்படி பிக்கிள் பால் விளையாட்டின் லீக் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கிறது. அதனையொட்டி ஒரு அணியை விலைக்கு வாங்கியிருக்கிறார் அவர். அதேபோல் இயக்குநர் அட்லீயும் பெங்களூரு அணியை விலைக்கு வாங்கியிருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்கள் இருவரும். அப்போது அட்லீயின் குழந்தையை வாஞ்சையோடு அணைத்துக்கொள்ளும் சமந்தா; பிறகு அட்லீயுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது அவரை பார்த்து, ஹய்யோ ஹய்யோ தேவையா இந்த ஸ்ட்ரெஸ்ஸு என்று கலாய்க்கிறார். இதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X