Samantha: பயபக்தியில் சமந்தா.. அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிட்டாங்க போல.. சுத்து போட்ட ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தா தற்போது பான் இந்தியா பிரபலம். ஓடிடி தளங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைத்த பின்னர் இவரது ரசிகர்கள் பட்டாளம் இந்தியா முழுவதும் பரவி விட்டது. தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் நேரடியாக இந்தியிலும் நடிக்கிறார். இவர் இன்று அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சமந்தா சென்னை பெண் என்பது பலருக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் தன்னை பல்லாவரம் பொண்ணு என மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிக் கொள்வார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர தனது சினிமா கெரியரை தொடங்கிய சமந்தா, அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். சினிமாதான், நடிப்புதான் வாழ்க்கை என சினிமாவிற்குள் நுழைந்தவருக்கு நடிகர் நாக சைதன்யா மீது காதல் ஏற்பட்டதால் அவரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் 2021 ஆம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்துவிட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அவர்களின் விவாகரத்தின்போது நாக சைதன்யா தரப்பில் இருந்து ரூபாய் 200 கோடிகளை ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்துள்ளார்கள். ஆனால், சமந்தா அந்த பணத்தை, ஒரு நொடியில் வேண்டாம் என்று கூறிவிட்டார். அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டாலும் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இன்னும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னும் உள்ளது.

Actress samantha ruthprabhu Visited Tirupati Temple Video Goes Trending

விவாகரத்து: இவர்கள் இருவரும் விவாகரத்து பெற முக்கிய காரணமாக , சமந்தாவின் நடிப்பு தான் என சிலர் கூறுகிறார்கள். சமந்தா தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கும் நடிப்பை வெளிப்படுத்தும் எண்ணம் கொண்டவர். இவர் நடித்த ஃபேமிலி மேன் வெப் சீரீஸில் கிளாமர் காட்சிகளில் நடித்தது பேசு பொருளாக மாறியது. அதனால் தான் அவர்கள் பிரிந்தார்கள் என கூறப்படுகிறது. விவாகரத்துக்குப் பின்னர் சமந்தா நடித்து வருகிறார். கிளாமர் கதாபாத்திரத்திற்கு கிளாமராகவும், ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு ஹோம்லியாகவும் நடித்து வருகிறார்.

படங்கள்: சமந்தா தற்போது ஹிந்தி படங்கள், வெப் சீரிஸ்கள் என இவற்றில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனாலோ என்னவோ இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் படம் வெளியாகவில்லை. மேலும் வேறு மொழிகளில் வெளியான படங்களும் வணிக ரீதியாக வெற்றிகளைப் பெறவில்லை. ஆனாலும் சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் குறைந்த பாடில்லை. மேலும் சமந்தா மைசிடியஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமந்தா தற்போது பாலிவுட் இயக்குநர் ஒருவருடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்ற கிசுகிசுக்கள் உலாவி வந்தாலும், சமந்தா இது குறித்து இன்னும் வாய் திறக்காமல் உள்ளார்.

Actress samantha ruthprabhu Visited Tirupati Temple Video Goes Trending

திருப்பதி: தமிழில் இவரை படம் நடிக்க சொல்லி ரசிகர்கள் கேட்டுக் கொண்டு உள்ளார்கள். இப்படியான நிலையில் நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தாவுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X