நாகர்ஜூனா ஸ்டூடியோவிற்குள் சமந்தா திடீர் விசிட்… காரணம் என்ன?

ஐதராபாத் : நடிகை சமந்தா நாக சைதன்யாவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென விவாகரத்து செய்துள்ளார்.

அவரது இந்த முடிவு சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாக சைத்தன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகர்ஜூனாவின் ஸ்டூடியோவிற்கு சமந்தா திடீரென நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா q

நடிகை சமந்தா q

நடிகை சமந்தா தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழில் உருவாகிவரும் சகுந்தலம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்கள் இவரது நடிப்பில் வெளியாக உள்ளன.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். திமேரி என் முராரியின் அரேஞ்மெண்ட்ஸ் ஆப் லவ் என்ற நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள ஆங்கில படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிலிப் ஜான் இயக்கவுள்ளார்.

ஆங்கில படத்தில் சமந்தா

ஆங்கில படத்தில் சமந்தா

இதில் தமிழ் பெண்ணாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை சமந்தாவின் ஓ பேபி படத்தை தயாரித்த சுனிதா ததி தயாரிக்கிறார். இந்தப் படத்தின்மூலம் ஹாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் சமந்தா. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி தற்போது ஆங்கிலத்திலும் நடிக்கிறார்.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

முன்னதாக தனது இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கையை கடந்த அக்டோபர் 2ம் தேதி தனது விவாகரத்து முடிவின்மூலம் நிறைவு செய்துள்ளார் சமந்தா. அவரது இந்த முடிவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இந்த முடிவால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதிகமான விமர்சனங்கள்

அதிகமான விமர்சனங்கள்

இதன்மூலம் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்ட சமந்தா, நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் தற்போது அவர் தொடர்ந்து படங்களில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். மேலும் ஆன்மீகத்திலும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இதன்மூலம் அவரது மனம் தற்போது அமைதிக்குள்ளாகியுள்ளது.

முன்னாள் மாமனார் ஸ்டூடியாவிற்கு விசிட்

முன்னாள் மாமனார் ஸ்டூடியாவிற்கு விசிட்

இந்நிலையில் தனது முன்னாள் மாமனார் நாகார்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவிற்கு அவர் திடீரென சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் அங்கு சென்றார் என்பது குறித்து ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திய நிலையில், அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

டப்பிங் பணிகள்

டப்பிங் பணிகள்

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகள் அங்கு நடைபெற்று வரும் நிலையில், அதற்காக அவர் அங்கு சென்றதாக சமந்தாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X