Don't Miss!
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புஷ்பா படத்தில் ஆட்டம் போடும் சமந்தா… சிறப்பாக அமையும் என குஷி
ஐதராபாத் : நடிகை சமந்தா சமீபத்தில் விவாகரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தார்.
தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தன்னை திரைப்பட சூட்டிங்குகளில் இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு அவர் ஆட்டம் போடவுள்ளார்.
தொடரும்
கொலை
மிரட்டல்..
நீங்களும்
பெண்தான்..
சோனியா
காந்தியிடம்
நியாயம்
கேட்கும்
கங்கனா
ரனாவத்!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமாகி, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

விவாகரத்து முடிவு
சமீபத்தில் நாக சைத்தன்யாவுடனான தனது இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்து அறிவிப்பு வெளியிட்ட அவர், மனதளவில் தனக்கு ஏற்பட்ட காயத்தை தீர்க்க ஆன்மீகத்தில் தனது கவனத்தை திருப்பியிருந்தார். பல கோயில்களுக்கு சென்று அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

படங்களில் கவனம்
இந்நிலையில் தற்போது மீண்டும் படங்களில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு புஷ்பா படத்தில் அவர் நடனமாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 17ம் தேதி ரிலீசாக உள்ளது.

புஷ்பா படம்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட்செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவரையும் வித்தியாசமான கெட்டப்பில் பார்க்க முடிந்தது. மேலும் படத்தில் பகத் பாசில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

பாடலுக்கு நடனம்
இந்நிலையில் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக இந்தப் பாடலுக்கு சமந்தா நடனமாட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமாரின் முந்தைய படமான ரங்கஸ்தலத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்
தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் சாகுந்தலம் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. மேலும் ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமந்தா குஷி
இதனிடையே புஷ்பா படத்தின் பாடலுக்கு சமந்தா நடனமாடுவது உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் பிரம்மாண்டமான செட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு கமெண்ட் செய்துள்ள சமந்தா இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக அமையும் என்று கூறியுள்ளார்.