Actress Samantha: பார்முக்கு திரும்பும் சமந்தா.. க்யூட் உடையில் ரசிகருடன் செல்ஃபி!

சென்னை: நடிகை சமந்தா முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படம் கொடுத்தவர். தமிழ், தெலுங்கு, இந்தியில் அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள் என நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக சினிமாவில் நடிக்காமல் தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். முன்னதாக நாக சைத்தன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற சமந்தா நடிப்பில் முழு கவனத்தை மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரசிகர்களிடையே பகிர்ந்த சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தற்போது தொடர் சிகிச்சை காரணமாக சமந்தா இந்த நோய் பாதிப்பிலிருந்து ஓரளவிற்கு மீண்டுள்ளதாக தெரிகிறது. இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான குஷி படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சிறப்பாக அமைந்தது. படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்தார் சமந்தா. இவர் பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மறுமணம் குறித்த கேள்விக்கு மறைமுகமாக பதிலளித்த சமந்தா, விவாகரத்து செய்பவர்கள் அதிலும் மறுமணம் செய்துக் கொண்டு விவாகரத்து செய்பவர்களின் புள்ளி விவரங்களை பதிவிட்டிருந்தார்.

Actress Samantha was snapped at the Hyderabad Airport with Stylish look

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழில் பாணா காத்தாடி என்ற படம்மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து 10 ஆண்டுகளை கடந்து இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து படங்கள், வெப் தொடர்களில் நடித்து வந்தார். நடிகர் நாகசைத்தன்யாவை கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்த சமந்தா, 2021ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். தொடர்ந்து சமந்தாவிற்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த நோய்க்காக சிகிச்சை பெறும்வகையில் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் உள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்றுவரும் சமந்தா, அதன் புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

குஷி படம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தா நடிப்பில் வெளியான குஷி படம் மிகப்பெரிய விமர்சனங்களையும் நல்ல வசூலையும் குவித்தது. தன்னுடைய திருமணம், விவாகரத்து, நோய் பாதிப்பு என எதுவும் தன்னுடைய கேரியரை பாதிக்காமல் பார்த்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

விமானநிலையத்தில் சமந்தா: மேலும் தன்னுடைய பிட்னஸ் வீடியோக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வரும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் 31.6 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மட்டுமில்லாமல் தற்போது விளம்பரங்களிலும் பிசியாகியுள்ளார் சமந்தா. சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் சர்வதேச அளவில் காணப்படுகின்றனர். அவர் மீண்டும் நடிக்கத்துவங்கும் நாளுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஐதராபாத் விமானநிலையத்தில் சமந்தா நடந்து சென்ற வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஸ்டைலான உடையில் கூலர்ஸ், கிளட்ச் சகிதம் அவர் நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ரசிகருடன் சமந்தா செல்ஃபி: தன்னுடைய மொபைலை பார்த்தபடி ஸ்டைலாக நடந்து சென்ற சமந்தாவை ரசிகர்கள் தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அவருடன் இணைந்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தன்னுடைய மொபைலில் எதையோ பார்த்து உற்சாகமாக சிரித்தபடி சமந்தா நடந்து வந்தார். முன்னதாக குதிரையேற்றம் செய்த சமந்தாவின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் மாலை வேளையில் குதிரையேற்ற பயிற்சியில் சமந்தா ஈடுபட்டுள்ளார். இதையடுத்து புதிதாக அவர் கமிட்டாகியுள்ள படத்திற்காக இந்த பயிற்சியை அவர் மேற்கொண்டு வருகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X