நடிகை சமந்தா விரலில் புதிய மோதிரம்.. காரணம் இதுதான்!

ஐதராபாத் : நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.

அவரது நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யசோதா படம் ரிலீசான நிலையில், அடுத்ததாக சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல ஹிட் நம்பர்களை கொடுததுள்ளார். தென்னிந்திய அளவில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ள சமந்தா, பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

அரியவகை நோய் பாதிப்பு

அரியவகை நோய் பாதிப்பு

நாக சைத்தன்யாகவுடனான தன்னுடைய திருமண உறவை முடித்துக் கொண்டதாக அறிவித்த சமந்தா, தொடர்ந்து தன்னுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். பாலிவுட்டிலும் அக்ஷயுடன் புதிய படத்தில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயினால் சமந்தா பாதிக்கப்பட்டார்.

மீண்டுவரும் சமந்தா

மீண்டுவரும் சமந்தா

இதையடுத்து கடந்த 7 மாதங்களாக அந்த நோய்க்கான சிகிச்சையை சமந்தா மேற்கொண்டார். தற்போது அந்த நோயிலிருந்து மீண்டு வருகிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இருந்தும் விலகியிருந்த சமந்தா, அடுத்தடுத்து புகைப்படங்கள், பிட்னஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

வொர்க்அவுட் வீடியோக்கள்

வொர்க்அவுட் வீடியோக்கள்

வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோக்களை சமந்தா தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னடைய விரலில் புதிய மோதிரம் ஒன்றை அணிந்துக் கொண்டு, அதன் புகைப்படத்தை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமந்தாவின் ஸ்பெஷல் மோதிரம்

சமந்தாவின் ஸ்பெஷல் மோதிரம்

மகாசிவராத்திரி ஸ்பெஷலாக சமந்தா இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. நாகசைத்தன்யாவுடனான விவாகரத்து முடிவு, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு, படங்களின் ரிலீஸ் தள்ளிப் போவது உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சமந்தா, அடுத்தடுத்து ஆன்மீக பயணங்களால் தன்னை ஆசுவாசப்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய விரலில் ஆன்மீகத்தை குறிக்கும் வகையில் மோதிரத்தை அவர் அணிந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X