கேம் ஷோவில் 25 லட்சத்தை வென்ற சமந்தா.. பணத்தை வெச்சி என்ன செய்வது...மனநிம்மதி இல்லை !

ஆந்திரா : தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா ஒரு மணி நேரத்திலேயே 25 லட்சம் ரூபாயை சம்பாதித்தார்.

எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற நிகழ்ச்சியை ஜூனியர் என் டிஆர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா பல கேள்விகளுக்கு சரியான பதிலளித்து 25 லட்சத்தை வென்றார்.

இந்த நிகழ்ச்சி அக்டோபர் 15 ஆம் தேதி தசரா பண்டிகை அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

பிரிகிறோம்

பிரிகிறோம்

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்திருந்தனர். பல உரையாடல்கள் மற்றும் யோசனைகளுக்கு பிறகு நானும் சாயும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் அழகான நட்பு உள்ளது. அது இனியும் தொடரும் என அதில் இருவருமே குறிப்பிட்டு இருந்தார்கள். இது அவர்களின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ரூ 25 லட்சம்

ரூ 25 லட்சம்

இந்நிலையில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா ஒரு மணி நேரத்தில் 25 லட்சத்தை வென்றார். அதில், பல விதமான கேள்விகளுக்கு சமந்தா சரியான பதில்களை அளித்து 25 லட்சத்தை வென்றுள்ளார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது.

Recommended Video

என் Divorce-கு காரணம்? Samantha Opens Up | வைரலாகும் அதிர்ச்சி தகவல்
மன வேதனையில்

மன வேதனையில்

மேலும் இந்த 25 லட்சத்தை என்ன செய்யப்போகிறார் என ரசிகர் கேட்ட கேள்விக்கு புன்னகையுடன் சிரித்துக்கொண்டே நிகழ்ச்சியின் முடிவுக்கு சென்றார். ஒரு பக்கம் வருமானத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் மற்றொரு பக்கம் தாங்க முடியாத மன வேதனையில் தவித்து வருகிறார் சமந்தா. விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்ஸ்கள் பலர் பணத்தை வெச்சு என்ன செய்வது சமந்தாவுக்கு மனதில் நிம்மதி இல்லையே என்று வருத்தத்துடன் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X