சமந்தா பகிர்ந்த புகைப்படங்கள்…பேரு வச்சீங்க சோறு வச்சீங்களா? என்று கேட்கும் ரசிகர்கள்
ஹைதராபாத் : புஷ்பா திரைப்படத்தை ரசிகர்கள் மறந்தாலும் அந்த படத்தில் வரும் ' Ooh சொல்றியா ' பாடலை மறக்க வாய்ப்பில்லை.
புஷ்பா படம் பார்த்து திரையரங்குகளில் இருந்து வெளியே வந்த பெரும்பான்மை ரசிகர்கள் சிலாகித்துப் பேசியது சமந்தாவின் ooh சொல்றியா பாடல் மற்றும் அதில் அவர் ஆடிய நடனத்தை பற்றியே. அது இன்று வரை வைரலாக உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா மெலிந்து காணப்படும் ஒரு நாயின் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பலர் அதை பற்றி பேசி வருகின்றனர்.

தெலுங்கின் முன்னணி கதாநாயகி
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ' Eh Maaya Chesavo " திரைப்படத்தின் மூலம் தெலுங்கிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார். அந்த படத்தில் அவர் நடிப்புக்கு சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருது மற்றும் ஆந்திராவின் உயரிய விருதான நந்தி விருதையும் வென்றார். சமந்தா தனது முதல் படத்தில் இருந்து இன்று வரை தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

புகழ் பணம் காதல் கல்யாணம்
" Eh maaya chesavo " படத்தின் கதாநாயகன் நடிகர் நாக சைதன்யா - இவர் நாகார்ஜுனாவின் மூத்த மகன். அதைத் தொடர்ந்து சமந்தா மற்றும் நாக சைதன்யா வேறு சில படங்களில் ஒன்றாக நடித்தனர். ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக முணுமுணுக்க பட்டது. ஒரு கட்டத்தில் அது காதலாக மாறி சில காலங்களிலேயே அது கல்யாணத்தில் முடிந்தது. ஆரம்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அவைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. சமந்தா தொட்டதெல்லாம் பொன் என்பது போல பணம் புகழ் காதல் கல்யாணம் என எல்லாம் தானாகவே வந்து சேர்ந்தது. அதன் பின்னர் நான்கு வருட மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி இருவரும் பிரிந்தனர்.

ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் சமந்தா
இந்தியில் சமந்தா நடித்த வெப் சீரிஸ் ஆன The Family man - 2 பெரும் வரவேற்பை பெற்றது. சமந்தாவின் புகழ் தென்னகம் மட்டுமில்லாமல் வடக்கிலும் பரவியது. அதற்காக பல விருதுகளை வென்றார். இதன் தொடர்ச்சியாக சமந்தா ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். Arrangements of Love எனும் படத்தில் இணைந்துள்ளார். இதை இயக்குபவர் ஃபிலிப்ஸ் ஜான். இது ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம். இதற்கிடையில் நிஜ வாழ்க்கையில் விவாகரத்து பெற்றுக் கொண்ட காதல் தம்பதி சமந்தாவும், நாகசைதன்யாவும் விரைவில் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தெலுங்குப் பட டைரக்டர் நந்தினி என்பவர் படத்தை இயக்கப் போகிறாராம். அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று பலரால் சொல்லப்படுகிறது.

பேரு வச்சீங்க. சோறு ?
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மெலிந்த நாயின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது பல நாள் சோறு தண்ணி இல்லாமல் பட்டினி கிடக்கும் நாயைப் போல தோற்றமளிக்க இதைப் பார்த்து ரசிகர்கள் " நாய்க்கு பேரு வச்சீங்க சோறு வச்சீங்களா ?" என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புதுவித நாய் எந்த ரகம் எனும் விவாதங்களும் நடைபெறுகின்றன. நடிகைகள் நாய்குட்டிகளை கொஞ்சுவதும் விதவிதமான நாய்களுடன் போஸ் செய்வதும் புதிதல்ல தான். இந்த முறை சமந்தா ஸ்பெஷல் அப்டேட் செய்து வித்தியாசமான அந்த நாய்க்கு பல கம்மெண்ட்ஸ் பெற்று வருகிறார் .


Click it and Unblock the Notifications











