Actress Samantha: வெள்ளை நிற டாப்பில் ரசிகர்களுக்கு விருந்து.. சண்டே ஸ்பெஷல் கொடுத்த சமந்தா!

சென்னை: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார். பல ஆண்டு காலங்களாக இவர் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். தமிழில் விக்ரம், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. பானா காத்தாடி படம் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். விஜய் மற்றும் சமந்தா காம்பினேஷனில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை விஜய் ரசிகர்களிடையே பெற்று தந்துள்ளது.

இந்தப் படங்களில் விஜய் -சமந்தாவின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. இவர்களின் காம்பினேஷன் ரசிகர்களை மிகச் சிறப்பாக கவர்ந்து இந்தப படங்களின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. தன்னுடைய உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சில படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்கும் முடிவில் அடுத்தடுத்த போட்டோசூட்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இவரது போட்டோசூட்களால் இன்ஸ்டாகிராம் பக்கமே சூடாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி காட்டினார் சமந்தா.

Actress Samantha s latest photoshoot released and impressed fans in Instagram

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ். தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து தொடர்ந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்/ சமந்தாவிற்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்/ இந்தியிலும் தி ஃபேமிலி மேன் 2. சிட்டாடல் இந்தியா வெர்ஷன் ஆகிய வெப் தொடர்களில் நடித்துள்ளார். இதில் தி ஃபேமிலி மேன் 2 சீரிஸ் சமந்தாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்று தந்தது. இதில் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவர்களது இயக்கத்திலேயே சிட்டாடல் இந்திய வெர்ஷனிலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இதன் ரிலீசை எதிர்பார்க்கலாம்.

Actress Samantha s latest photoshoot released and impressed fans in Instagram

நடிக்காமல் இருந்த சமந்தா: நடிகர் நாகசைத்தன்யாவுடன் ஏற்பட்ட பிரிவை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. ஆனால் அவருக்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் தன்னுடைய நோய் பாதிப்பிற்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார் சமந்தா. ஆனாலும் சமூக வலைதளங்களில் அவரை அடுத்தடுத்து ஆக்டிவாக காண முடிந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் தன்னுடைய பிட்னஸில் அதிக அக்கறை கொண்ட சமந்தாவின் பிட்னஸ் வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுலா வீடியோக்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

புதிய போட்டோஷுட்: இவரை இன்ஸ்டாகிராமில் 32.5 மில்லியன் பாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மீண்டும் நடிப்பில் தனது கவனத்தை செலுத்த உள்ள சமந்தா, இதையொட்டி அடுத்தடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீச்சல் உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஈடுபட செய்ததன. இந்நிலையில் தற்போது வித்தியாசமான வெள்ளை நிற டாப், ஜீன்ஸ் சகிதம் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மிக அதிகமாக ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைஸ்களையும் பெற்று வருகிறது.

Actress Samantha s latest photoshoot released and impressed fans in Instagram

லட்சக்கணக்கான லைக்ஸ்: இந்தப் புகைப்படங்கள் வெளியாகி ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே ஏறக்குறைய 4 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளன. இந்த புகைப்படங்களில் மாசான எக்ஸ்பிரஷ்களையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் சமந்தா. முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக அவரது சிட்டாடல் வெப் சீரிஸ் ரிலீசாக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் சமந்தாவை காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X