Samantha: வெளியில எப்படி இருந்தாலும் உள்ளுக்குள்ள இருக்கறதை மாத்த முடியாது.. சீக்ரெட் சொன்ன சமந்தா!

சென்னை: நடிகை சமந்தாவின் அடுத்தடுத்த மூவ்கள் சிறப்பாக அமைந்து வருகின்றன. மிகவும் பிசியான நடிகையாக தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பாக செயல்பட்டுவந்த சமந்தாவிற்கு கடந்த சில ஆண்டுகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. நாக சைத்தன்யாவுடன்ன பிரிவு, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்த சிக்கல்களில் அவர் மாட்டிக் கொண்டார்.

ஆனால் இந்த பிரச்சினைகளெல்லாம் தனக்கு ஜுஜுப்பி என்பது போல அவரது செயல்பாடுகள் காணப்பட்டன. தனக்கு நாக சைத்தன்யா தரப்பில் கொடுக்கப்படவிருந்த ஜீவனாம்சத்தை அவர் வேண்டாம் என்று மறுத்ததாக கூறப்பட்டது. இதேபோல லட்சக்கணக்கான சம்பளம் எல்லாம் பெரிதில்லை எண்ணும்படியாக அவர் தன்னுடைய நோய்க்கான சிகிச்சைக்காக சில மாதங்கள் நடிப்பிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார்.

samantha instagram tamil cinema

நடிகை சமந்தா: நடிகை சமந்தா 20 ஆண்டுகளை கடந்த தன்னுடைய திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் அதிகமான ஹிட்களை கொடுத்துள்ளார். பல முன்னணி ஹீரோக்களுடட்ன இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் சமந்தா இணைந்து நடித்த தெறி, மெர்சல் படங்கள் அவரது கேரியரில் மட்டுமில்லாமல் விஜய்யின் கேரியர் பெஸ்ட்டாகவும் அமைந்தன. தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தி பேமிலி மேன் 2 வெப் தொடரிலும் முக்கியமான கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டார். இந்தப் படம்தான் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சில முக்கியமான முடிவுகளுக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் சமந்தா: இந்தப் படத்தை ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடித்திருந்தார் சமந்தா. இந்த சீரிஸ் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அவர்கள் இயக்கத்திலேயே சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடரிலும் அதிரடி காட்டியிருந்தார். இந்த தொடரில் சமந்தாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக பார்க்கப்பட்டன. அடுத்ததாக மலையாளத்திலும் ஒரு படத்தில் சமந்தா என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சமந்தாவின் ரீஎன்ட்ரி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சில மாதங்கள் தன்னுடைய நோய்க்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதற்காக சினிமாவில் இருந்து விலகியிருந்தார் சமந்தா.

மெடிடேஷன் குறித்து சமந்தா: தற்போது மீண்டும் நடிப்பதில் களமிறங்கியுள்ள சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களால் நிரம்பி வழிகிறது. மேலும் ஆன்மிகத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. தற்போது இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள சமந்தா, தன்னுடைய அமைதியான மனநிலையை தான் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவருக்கு உறுதுணையாக தியானம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை மற்றவர்களும் முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தினந்தோறும் 15 நிமிடங்கள் மெடிடேஷன் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

ஆழ்கடல் அமைதி: தனக்கு எல்லாமுமாக தியானம் காணப்படுவதாகவும் தன்னுள்ளே இருக்கும் ஆழ்கடலின் அமைதியை வெளிப்படுத்த தியாம் கைக்கொடுப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். உலகம் எவ்வளவு இரைச்சலாக இருந்தாலும் தன்னுள்ளே இருக்கும் அமைதி தனக்காக காத்திருப்பதாகவும் சமந்தா கூறியுள்ளார். இன்றிலிருந்து தியானத்தை மேற்கொள்ளுமாறு அவர் தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு மணிநேரத்திலேயே 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் தங்களின் லைக்ஸ்களை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X