Samantha: தங்கநிற ஆடையில் ஜொலிக்கும் சமந்தா.. குதூகலத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை சமந்தா 15 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களிலும் பாலிவுட்டிலும் சமந்தா நடித்து வருகிறார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராகவும் உள்ளார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக குஷி படம் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

Actress Samanthas new photo in Golden dress makes fans impressed

தங்கநிற உடையில் ஜொலிக்கும் சமந்தா: நடிகை சமந்தா 15 ஆண்டுகளை கடந்து சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக நிலை பெற்றுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள சமந்தா, அதர்வாவுடன் பானா காத்தாடி படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து விஜய், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

பாலிவுட்டில் இவர் நடித்திருந்த தி பேமிலி மேன் 2 வெப் தொடர் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து தற்போது சிட்டாடல் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரில் வருண் தவானுடன் நடித்துள்ளார் சமந்தா. அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்றார் சமந்தா. தற்போது தன்னுடைய அரிய வகை நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையொட்டி வெளிநாட்டில் இருந்தபடி தன்னுடைய கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் சமந்தா. தெலுங்குப்பட ஹீரோ நாகசைத்தன்யாவை திருமணம் செய்த சமந்தா, கடந்த 2021ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து தன்னுடைய படங்களில் கவனம் செலுத்திவந்த அவருக்கு மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில மாதங்கள் முடங்கிய அவர், தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தினார்.

Actress Samanthas new photo in Golden dress makes fans impressed

தன்னுடைய நோய்க்கான சிகிச்சைக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார். படங்களில் சில மாதங்கள் நடிக்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தாலும் அவர் விரைவில் நோயிலிருந்து முழுமையாக மீண்டுவர பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் அவரது குஷி பட ரிலீஸ், சமூக வலைதள போஸ்ட்கள் போன்றவை அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. சிகிச்சைக்காக சென்றபோதிலும் ஒருபக்கம், தன்னுடைய கொண்டாட்டங்களையும் மிஸ் செய்யாமல் உள்ளார் சமந்தா.

இந்நிலையில் தங்க நிற உடையில் சமந்தா ஜொலிக்கும் புகைப்படத்தை பிரபல புகைப்பட கலைஞர் வைஷ்ணவி பிரவீன் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படத்தை அதிகமான ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் புகைப்படத்திறகான லைக்ஸ் ஏறக்குறைய ஒரு மில்லியனை ஒரே நாளில் நெருங்கியுள்ளது. சமந்தா எப்போதுமே குயின்தான் என்று பல்வேறு கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X