பார்பி டாலாக க்யூட் கெட்டப்பில் போஸ் கொடுத்த சமந்தா.. லண்டனில் இருந்தபோது எடுத்ததாம்!

சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தன்னுடைய அரியவகை நோய் பாதிப்பிற்காக இவர் ட்ரீட்மென்ட் எடுத்த நிலையில் தற்போது அதிலிருந்து ஏறக்குறைய மீண்டு, மீண்டும். படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அடுத்ததாக மலையாளத்திலும் இவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடுத்தடுத்த போட்டோசூட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் க்யூட்டாக காணப்படுகிறார்.

samantha instagram tamil cinema

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர். பல ஆண்டுகளாக ரசிகர்களை தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் கவர்ச்சியாலும் ஆட்டிவைத்து வரும் சமந்தா, இந்தியிலும் அடுத்தடுத்த வெப் தொடர்களில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். அடுத்ததாக மலையாளத்திலும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் சமந்தா. இதன் மூலம் மலையாள திரையுலகில் அவர் தன்னுடைய என்ட்ரியை கொடுக்க உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சமந்தா வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.

samantha instagram tamil cinema

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: 2017ம் ஆண்டில் இவர் திருமணம் செய்த நிலையில் நாகசைத்தன்யாவுடன் விவாகரத்து மற்றும் அரியவகை நோய் பாதிப்பு என அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்த போதிலும் அவற்றிலிருந்து எல்லாம் பீனிக்ஸ் பறவையாய் வெளியில் வந்து, தற்போது மீண்டும் தன்னை மீட்டுவித்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் சமத்தா, சமூக வலைத்தளங்களில் தன்னை எப்போதுமே ஆக்டிவாக வைத்து வருகிறார்.

samantha instagram tamil cinema

க்யூட் போட்டோசூட்: அந்த வகையில் அடுத்தடுத்த போட்டோ ஷூட்கள் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தன்னுடைய ரொட்டீன் வாழ்க்கையில் தான் தன்னுடைய ஹெல்த் மற்றும் ஸ்கின் இவற்றிற்காக மேற்கொள்ளும் அடுத்தடுத்து செயல்பாடுகளையும் சமீபத்தில் அவர் வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ அவரது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது லண்டன் கலாச்சாரத்தில் சமந்தா புதிய கான்செப்டில் போட்டோ சூட் எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளார்.

samantha instagram tamil cinema

லைக் செய்த துஷாரா விஜயன்: இந்த புகைப்படங்கள் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது. துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை தட்டி விட்டுள்ளனர். இவரது லுக் மற்றும் அழகை பார்த்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவரை சினிமாவில் அசைக்க முடியாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கிங் இல்லாவிட்டாலும் சமந்தா குயின்தான் என்றும் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X