சமந்தா புன்னகையின் விலை கேட்கும் ஃபேன்ஸ்.. பார்வையால் ரசிகர்களை கடத்தும் குஷி பட நடிகை!
சென்னை: நடிகை சமந்தா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அடுத்தடுத்த பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர்களில் நடித்துள்ளார். இதில் பேமிலி மேன் 2 வெப் தொடர் சமந்தாவிற்கு மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.
சமீபத்தில் வெளியான சிட்டாடல் ஹனி பன்னி தொடரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதில் ஆக்சன் காட்சிகளிலும் சமந்தா பின்னி பெடலெடுத்திருந்தார். தன்னுடைய உடல் நல பாதிப்பால் சில மாதங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மலையாளத்தில் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா 20 ஆண்டுகளை கடந்த தன்னுடைய திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்தியில் அடுத்தடுத்த வெப் தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியவர். இவரது ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் அதே ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடரிலும் நடித்திருந்தார் சமந்தா. மலையாளத்திலும் என்ட்ரி கொடுக்க உள்ள சமந்தா கடந்த சில மாதங்களாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.

மீண்டும் களமிறங்கிய சமந்தா: கடந்த சில மாதங்களாக தன்னுடைய உடல் நலத்தை சிறப்பாக பார்த்துக் கொண்டுள்ள சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் சமந்தா, அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இவரது instagram ஃபாலோயர்களின் எண்ணிக்கை 37 மில்லியன் பாலோயர்களை நெருங்கியுள்ளது. இதனிடையே தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அழகு அள்ளுகிறது. வெள்ளை நிற காஸ்டியூமில் காணப்படும் சமந்தா தன்னுடைய சிரிப்பால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார்.

போட்டோஷுட் புகைப்படங்கள்: இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. ஒரே நாளிலேயே ஒரு மில்லியன் லைக்ஸ்களை இந்த புகைப்படங்கள் பெற்றுள்ளன. தன்னுடைய ஹெல்த்தில் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வருபவர் சமந்தா. அடுத்தடுத்த பிட்னஸ் வீடியோக்களையும் இவர் வெளியிட்டு ரசிகர்களுக்கு உத்வேகமாக அமைந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் பெண் குறித்து தன்னுடைய பதிவை வெளியிட்டுள்ளார் சமந்தா. இந்த வீடியோவில் அழகான உடையில் காணப்படும் சமந்தா பெண் என்பவள் முரண்பாடுகளின் சிம்பெனி என்று தெரிவித்துள்ளார்.
சமந்தா வெளியிட்ட வீடியோ: மேலும் பெண் என்பவள் மென்மையானவளாகவும் அதே நேரத்தில் வலிமை மிக்கவளாகவும் இருப்பதாகவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார். பெண் என்பவள் அழகானவள் மட்டுமில்லாமல் உறுதியான லட்சியம் மற்றும் தியாக மனப்பான்மை கொண்டவள் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். அதிகமான செயல்பாடுகளை செய்தாலும் அமைதியாக இருக்கவும் பெண்ணுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். சிக்கலானவளும் அதே நேரத்தில் கவிதை போன்றவளும் பெண்தான் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











