செக்ஸியாக இருப்பது அடுத்த லெவல் ஹார்டுவொர்க்.. 'ஊ சொல்றியா மாமா' பாடல்.. நடிகை சமந்தா அடடே விளக்கம்!

சென்னை: செக்ஸியாக இருப்பது அடுத்த லெவல் ஹார்டுவொர்க் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சர்ச்சைக்குறிய பாடல்..

சர்ச்சைக்குறிய பாடல்..

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா... என்ற பாடல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பாடலுக்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்தது.

படு கவர்ச்சியாக ஆட்டம்

படு கவர்ச்சியாக ஆட்டம்

இருப்பினும் இந்த படம் வெளியாகி செம ஹிட்டாகி வருகிறது. வசூலையும் வாரி குவித்து வருகிறது. சர்ச்சைக்குள்ளான இந்த ஐட்டம் பாடலில் நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். பாவடை ஜாக்கெட்டுடன் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார் சமந்தா. இந்த பாடலும் பெரும் ஹிட்டாகியுள்ளது. மில்லியன் கணக்கில் வியூஸ்களை குவித்து வருகிறது.

அடுத்த லெவல் ஹார்டு வொர்க்

அடுத்த லெவல் ஹார்டு வொர்க்

இந்நிலையில் இப்பாடலில் அல்லு அர்ஜூனுடன் நடனமாடும் அந்த பாடலின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. அதில் செக்ஸியாக இருப்பது அடுத்த லெவல் ஹார்டு வொர்க் என தெரிவித்துள்ளார்.

மோசமாக நடித்திருக்கிறேன்..

மோசமாக நடித்திருக்கிறேன்..

இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது. நான் நன்றாக நடித்திருக்கிறேன், மோசமாக நடித்திருக்கிறேன்.. வேடிக்கையாக இருந்தேன், நான் சீரியஸாக இருந்தேன், அரட்டை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தேன். நான் எடுக்கும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க மிகவும் கடினமாக உழைக்கிறேன்... ஆனால் செக்ஸியாக இருப்பது அடுத்த கட்ட ஹார்டு வொர்க் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Samantha -வை பிரிய இது தான் காரணம் | Nagachaitanya Opens up for first time
யஷோதா படத்திலும்...

யஷோதா படத்திலும்...

நடிகை சமந்தா தற்போது இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் ஷகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தற்போது பேன் இந்தியா படமாக உருவாகும் யஷோதா படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X