45 வயதான சமீரா ரெட்டி இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. கோட் மட்டும் போட்டுக்கிட்டு செம கவர்ச்சி!

சென்னை: வரும் செப்டம்பர் 20ம் தேதி தனது 46வது பிறந்தநாளை நாளை மறுநாள் கொண்டாட காத்திருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி. “அவ என் அஞ்சலை மச்சான்” என சூர்யாவை போல தமிழ்நாட்டு ரசிகர்களே பாடி அவரது அழகில் மயங்கியதை எல்லாம் எப்போதுமே மறக்க முடியாது.

1978ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி மும்பையில் பிறந்த சமீரா ரெட்டியின் சகோதரிகள் மாடலிங் துறையிலும் விஜே துறையிலும் செயல்பட்டு வந்தனர். அஜித்தின் சிட்டிசன் படத்தில் வசுந்தர தாஸுக்கு பதிலாக முதலில் நடிக்க வேண்டியதே இவர் தானாம்.

sameera reddy heroine vaaranam aayiram


ஆனால், அப்போது பாலிவுட் படத்தில் கமிட்டான நிலையில், சிட்டிசன் பட வாய்ப்பை தவிர்த்து விட்டாராம். மெயின் தில் துஜ்கோ தியா எனும் இந்தி படத்தில் சோஹைல் கான், சஞ்சய் தத் உடன் இணைந்து 2002ம் ஆண்டு நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம்: இந்தி, தெலுங்கு மற்றும் வங்காள மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் 2008ம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டார்.

அஜித் படத்தில்: சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சமீரா ரெட்டி அதன் பின்னர் அஜித் குமார், பாவனா நடிப்பில் வெளியான அசல் படத்தில் நடித்தார். நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் அக்‌ஷய் வர்தே என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இப்போ எப்படி இருக்கிறார்?: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சமீரா ரெட்டி ஒயிட் ஹேர் எல்லாம் வந்து பாட்டி போல மாறியிருந்த போட்டோக்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தன. ஆனால், தற்போது மீண்டும் டை எல்லாம் அடித்துக் கொண்டு வெறும் ஒரு கோட்டை மட்டும் அணிந்துக் கொண்டு அவர் லேட்டஸ்ட்டாக நடத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

துபாயில் வாழ்க்கை: மும்பையில் பிறந்து வளர்ந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என நடித்து அசத்தி வந்த சமீரா ரெட்டி தற்போது துபாயில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களிலும் துபாய் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சிம்ரனை போல மீண்டும் சினிமாவில் சமீரா ரெட்டியும் நடிக்க வரவேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X