தாய்மை பாரம் அல்ல.. அது ஒரு வரம்.. சமீரா ரெட்டியின் ஸ்வீட் போஸ்ட்!

மும்பை : தமிழில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்த சமீரா ரெட்டி இப்பொழுது வீட்டில் தனது குழந்தைகளுடன் செம்ம ஜாலியாக விளையாடி என்ஜாய் செய்து வருகிறார்.

கடைக்குட்டி நைரா உடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் சமீரா ரெட்டி, நைரா கருவுற்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தாய்மை அடைவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.

சாதனை புரிந்த

சாதனை புரிந்த

ஹிந்தி படத்துறையில் கலக்கி வந்த நடிகை சமீரா ரெட்டி தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். சூர்யா 2 வேடங்களில் கலக்கி இருந்த இந்த திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்த நிலையில், இப்படம் பல்வேறு விருதுகளையும் தட்டிச்சென்றது.

அக்சய் என்பவரை திருமணம்

அக்சய் என்பவரை திருமணம்

இவ்வாறு சமீரா ரெட்டி தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்டான நிலையில், வாரணம் ஆயிரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. இதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த சமீரா ரெட்டி 2014ஆம் ஆண்டு அக்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடைக்குட்டி நைரா

கடைக்குட்டி நைரா

இந்நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருக்கின்ற நிலையில், அவர்களுடன் இந்த லாக் டவுனில் செம ஜாலியாக விளையாடியவாறு பொழுதை கழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி கடைக்குட்டி நைரா உடன் கொஞ்சி விளையாடும் பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

வாழ்வில் மறக்க முடியாது

வாழ்வில் மறக்க முடியாது

தாய்மையை போற்றும் வகையில் பல்வேறு இடங்களில் பேசியுள்ள சமீரா, இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைரா வயிற்றில் குழந்தையாக இருக்கும்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் 9 மாதத்திற்கு முன்பு நான் கருவுற்றிருந்த காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அந்த தருணம் என் வாழ்வில் மறக்க முடியாதது.

அது ஒரு வரம்

அது ஒரு வரம்

கருவுற்றிருக்கும் காலத்தை யாரும் பாரமாக நினைக்காதீர்கள் அது ஒரு அழகிய தருணம், தாய்மை பாரம் அல்ல அது ஒரு வரம் அதை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என பெண்மையை போற்றும் வகையில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் பாராட்டுக்களையும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X