நீச்சல் குளத்தில் இருந்தபடி சமீரா ரெட்டி வெளியிட்ட கர்ப்பகால போட்டோஸ்.. சும்மா அதிருதுல்ல!
சென்னை : நடிகை சமீரா ரெட்டி சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் இவரது அழகு ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்தது.
Recommended Video
தொடர்ந்து வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார் சமீரா ரெட்டி. அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

நடிகை சமீரா ரெட்டி
நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருப்பார். மிகவும் அழகான அவர் பாதியிலேயே உயிரிழந்து சூர்யாவிற்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதையெடுத்து விஷால், மாதவன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார் சமீரா ரெட்டி.

பாலிவுட்டில் அறிமுகம்
தமிழ் படங்களில் அறிமுகமாவதற்கு முன்னதாகவும் தெலுங்கு, இந்திப் படங்களிலும் இவர் நடித்திருந்தார். பாலிவுட்டில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான மெய்னோ தில் துஜ்கோ தியா என்ற படத்தின்மூலம் தான் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து அஜித்தின் சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதையடுத்தே வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார்.

திருமணம் செய்துக்கொண்டு செட்டில்
தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமீரா, தொடர்ந்து அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் சமீரா. இவர் குழந்தைகள் பிறப்பிற்கு பிறகு மிகவும் குண்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

தண்ணீருக்குள் கர்ப்பகால போட்டோஷுட்
முடி நரைத்து குழந்தைகளுடன் இவர் வெளியிட்ட புகைப்படங்களும் தொடர்ந்து அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது தன்னுடைய உடலை பாதியாக குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் சமீரா ரெட்டி தற்போது தண்ணீருக்குள் எடுக்கப்பட்ட தன்னுடைய கர்ப்பக்கால புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

அருமையான தருணம்
தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் அருமையான தருணம் என்று இந்த தொகுப்பின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்ப காலத்தில் நம்முடைய உடலை கொண்டாடுவோம் என்றும் மற்றவர்கள் நம்மை கமெண்ட் செய்ய அனுமதிக்கூடாது என்றும் சமீரா ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

மாறியுள்ள வழக்கம்
தன்னுடைய கர்ப்பத்தை வெளியில் காட்டக்கூடாது என்ற கருத்து எப்போதுமே பெண்களிடம் காணப்படும். தற்போது இந்த நிலை மாறியுள்ளது. நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களது கர்ப்பகால போட்டோஷுட்டை எடுத்து அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதை வெளியிட எந்த தயக்கமும் தேவையில்லை என்பது அவர்களது கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











