நைராவுடன் கொஞ்சி விளையாடும் சமீரா..க்யூட்டான போட்டோஸ் !
மும்பை : தனது வெள்ளந்தியான சிரிப்பின் மூலம் நம் அனைவரின் மனங்களையும் பல்வேறு படங்களின் மூலம் கொள்ளையடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி.
சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆன நிலையில் தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது மகள் நைராவுடன் நீரில் நனைந்தவாறு எடுத்துக்கொண்ட போட்டோக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

இளமை துள்ளல்
‘6 அடி உயரம் அழகிய உருவம் என பார்க்க எப்போதும் இளமை துள்ளல் ஆக இருக்கும் சமீரா ரெட்டி தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர்.

வெள்ளந்தியான நடிப்பு
நடிகர் சூர்யாவுடன் இவர் இணையும் முதல் படமாக இது இருந்தாலும் இருவரின் ஜோடி இந்த படத்தில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது. நடித்த முதல் படத்திலேயே தனது வெள்ளந்தியான சிரிப்பாள் பல கோடி தமிழ் மக்களை ரசிகர்களாக பெற்றார் சமீரா.

தமிழில் வேட்டை
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமீரா ரெட்டி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து அங்கும் பிரபலமானார். மேலும் தமிழில் வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கொஞ்சி விளையாடும்
இவ்வாறு தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வந்த சமீரா ரெட்டி 2014 ஆம் ஆண்டு அக்சய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு ஹான்ஸ் என்ற மகனும் நைரா என்ற க்யூட்டான மகளும் இருக்கின்றனர். இவர்களுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது சமீரா ரெட்டி பகிர்ந்து வருகிறார்.

அட்டகாசங்களை
நம் அனைவரையும் தொடர்ந்து இவரின் படங்களின் மூலம் ரசிக்க வைத்து வந்த சமீரா தற்போது இந்த இரண்டு குட்டீஸ் உடன் இணைந்து செய்யும் அட்டகாசங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நம் அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.

மகள் நைரா
லாக்டவுன் சூழலில் நடிகைகள் அனைவரும் தங்களது விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் வேளையில் சமீரா ரெட்டி தனது ஒரு வயது நிரம்ப உள்ள மகள் நைராவுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்து வருகிறார். ஓரிரு நாட்களுக்கு முன் நைராவுடன் இணைந்து வெளியிட்டுள்ள ட்வின் ட்ரெஸ் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. சமீரா மற்றும் நைரா இருவரும் ஒரே மாதிரி ஆரஞ்சு கலர் உடையை உடுத்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் வைரலாகி வந்தது.

க்யூட்டான ஸ்மைல்
இதை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் சிகப்பு நிற ஆடையுடன் இருவரும் தண்ணீரில் நனைந்தவாறு எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படங்களை தற்பொழுது சமீரா பகிர்ந்துள்ளார். நைரா தனது க்யூட்டான ஸ்மைலில் சிரித்தவாறு சிகப்பு நிற உடையில் வெள்ளை தொப்பியுடன் தனது அம்மாவுடன் கொஞ்சி விளையாடி வருவது பார்க்கும் அனைவரையும் மெய்மறக்கச் செய்கிறது.

கற்றுக் கொள்ள வேண்டும்
இவ்வாறு லாக்டவுன் சமையத்தில் தனது மகளுடன் கொஞ்சி விளையாடியும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வரும் சமீரா ரெட்டியிடம் இருந்து இந்த இக்கட்டான சூழலில் எப்படி மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்று பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











