வாவ்… வாட்ட கோர்டினேஷன்... கோமாளி பட நடிகையின் அசத்தல் டான்ஸ்!
பெங்களூரு : கோமாளி திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தி இருந்த நடிகை சம்யுக்தா நடனத்தில் தாறுமாறு செய்துள்ளார்.
கன்னடத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் பப்பி திரைப்படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமானதைத் தொடர்ந்து இப்பொழுது பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டுமென சகல கலைகளையும் கற்று வரும் சம்யுக்தா இப்பொழுது செம கோர்டினேஷனில் தனது குழுவுடன் ஆடியுள்ள வித்தியாசமான கை நடனம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.தொடர்ந்து தாமான திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு ஜாக்பாட் அடித்தது போல கோமாளி திரைப்படம் மற்றுமொரு கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஆக அமைந்த நிலையில் எதிர்பாராத அளவிற்கு பெரும் வசூலை ஈட்டியது. இதில் ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்து அசத்தி இருந்த சம்யுக்தா அதைத்தொடர்ந்து பப்பி திரைப்படத்தில் கதாநாயகியாக கலக்கியிருந்தார்.

கிடைக்கிற கேப்பில் எல்லாம் கிடாவெட்டி விரைவில் தமிழ் சினிமாவை கலக்க இருக்கும் இந்த பெங்களூரு குயின் நடிப்பதில் மட்டுமல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஜிம் ஒர்க்கவுட் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வந்த நிலையில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு திணறடித்து வருகிறார்.நடனத்திலும் மிகவும் ஆர்வம் கொண்ட சம்யுக்தா அதில் சிறப்பு பயிற்சி எடுத்து வருவதோடு திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்டு வருகிறார். இந்த நிலையில் உட்கார்ந்த இடத்திலேயே புது விதமான கை நடனத்தில் கோரியோகிராஃபி குழுவுடன் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் கைகளாலேயே ஆடி அசத்தி இருக்கும் சம்யுக்தாவின் இந்த வேற லெவல் ஹாண்ட் டான்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வாவ் வாட்ட கோர்டினேஷன் என வாய் பிளந்து பார்த்தவாறு பாராட்டுக்களை பெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











