இரவு பார்ட்டியில் போதையில் அம்மாவுடன் ஆட்டம் போட்ட நடிகை... இதெல்லாம் ரொம்ப ஓவர்தான்!

சென்னை : இரவு பார்ட்டியில் கையில் பீருடன் அம்மாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை சம்யுத்தா ஹெக்டே. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்து போனார்கள்.

கன்னட திரையுலகின் இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பின்னார் கிரிக் பார்ட்டி படத்தில் ராஷ்மிகாவின் தோழியாக நடித்திருந்தார்.

இப்படம் ஹிட்டானதை அடுத்து தெலுங்கிலும் கிரிக் பார்ட்டி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சம்யுக்தாவே நடித்ததால், சம்யுக்தா தெலுங்கு ஆடியன்சுக்கும் தெரிந்த முகமானார்.

கோமாளி பட நடிகை

கோமாளி பட நடிகை

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷூடன் வாட்ச்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்த சம்யுக்தா, அப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் தாராளமாக நடித்திருந்தார்.

படவாய்ப்பு இல்லை

படவாய்ப்பு இல்லை

பெங்களூருவில் வசித்து வரும் இவர், கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் படத்திலும், ரணா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு இப்போது எந்த படங்களும் இல்லாததால், பட வாய்ப்புக்காக, சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கலர் கலர் பிகினியில்

கலர் கலர் பிகினியில்

முன்பெல்லாம், பிரபலமாக வேண்டும் என்றால் படாதபாடு படவேண்டி இருந்தது. ஆனால், இப்போது ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆகிவிடுவதால், கவர்ச்சியை கையில் எடுத்த சம்யுக்தா ஹெக்டே, தினம் தினம் கலர் கலர் பிகினியில் தாறுமாறாக வளைத்த வளைத்து போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

போதையில் ஆட்டம்

போதையில் ஆட்டம்

இந்நிலையில், இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட சம்யுக்தா ஹெக்டே, பீரை குடித்துவிட்டு போதையில் அம்மாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். டின் பீருடன் இருக்கும் போட்டோவையும் தனது, தாயுடன் போதையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X