twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்டன்ட் காட்சியின் போது பலத்த காயம்.. கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே மருத்துவமனையில் அனுமதி

    |

    பெங்களூரு: கோமாளி, பப்பி, மன்மத லீலை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

    படக்குழுவினர் அவரை உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    நடிகை உடனடியாக குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

     'வாங்க ரியல் சூப்பர் ஸ்டார்ஸ்'..நுங்கம்பாக்கம் போலீசாரை வீட்டுக்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு 'வாங்க ரியல் சூப்பர் ஸ்டார்ஸ்'..நுங்கம்பாக்கம் போலீசாரை வீட்டுக்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு

    கோமாளி பட நடிகை

    கோமாளி பட நடிகை

    கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு கன்னட திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. காலேஜ் குமார் படத்தைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டேவுக்கு ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் மூலம் ஏகபட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

    சேட்டை அதிகம்

    சேட்டை அதிகம்

    ஜெயம் ரவியின் பள்ளி வயது காதலியாக நடித்திருப்பார் கோமாளி படத்தில். குறும்புத்தனம் அதிகம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே அடுத்ததாக பிக் பாஸ் வருண் நடிப்பில் வெளியான பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். தொடர்ந்து பிரபுதேவாவின் தேள் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

    பிகினி உடையில்

    பிகினி உடையில்

    ஹாலிவுட் நடிகைகளே ஆச்சர்யப்படும் அளவுக்கு வெறும் தாங் மட்டுமே அணிந்து கொண்டு இவர் வெளியிட்ட பிகினி போட்டோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவையே சூடாக்கியது. மேலும், நண்பர் ஒருவரின் பார்ட்டியில் சரக்கடித்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு அனலை கிளப்பி இருந்தார்.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    இந்நிலையில், க்ரீம் எனும் கன்னட படத்தில் நடித்து வரும் சம்யுக்தா ஹெக்டே சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலமாக அடிபட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார் சம்யுக்தா ஹெக்டே. அவருக்கு கால் மற்றும் கண்ணுக்கு அருகே பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அறிமுக இயக்குநர் அபிஷேக் பசாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் க்ரீம் படத்தில் சண்டை இயக்குநர்கள் பிரபு மற்றும் கந்தீரவா ஸ்டன்ட் காட்சிகளை படமாக்கி வந்தனர். ரிஸ்க்கான ஸ்டன்ட் என்பதால், டூப் போட்டு எடுத்து விடலாம் என இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், நானே ஸ்டன்ட் செய்கிறேன் என துணிச்சலோடு வந்த நிலையில், இப்படியொரு விபத்தில் சிக்கினார் சம்யுக்தா என இயக்குநர் அபிஷேக் தகவல் தெரிவித்துள்ளார்.

    15 நாள் ரெஸ்ட்

    15 நாள் ரெஸ்ட்

    உடனடியாக குணமாகும் அளவுக்கு எல்லாம் அடிபடவில்லை. அடி சற்றே பலமாக பட்டுள்ளது என்றும், குறைந்த பட்சம் ஒரு 15 நாளாவது மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் நடிகை சம்யுக்தா ஹெக்டே என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Actress Samyuktha Hegde injured in shooting spot and hospitalized with severe injuries in her leg and near her eyes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X