கண்ணாடி முன் டாப்லெஸில் அப்படி ஒரு போஸ்.. போட்டோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்!
சென்னை: நடிகை சம்யுக்தா ஹெக்டே கண்ணாடி முன் தலைவிரி கோலமாக டாப்லெஸில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னட திரையுலகின் இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ராஷ்மிகாவின் தோழியாக நடித்திருந்தார்.
இப்படம் ஹிட்டானதை அடுத்து தெலுங்கிலும் கிரிக் பார்ட்டி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் சம்யுக்தாவே நடித்ததால், சம்யுக்தா தெலுங்கு ஆடியன்சுக்கும் தெரிந்த முகமானார்.

நடிகை சம்யுக்தா ஹெக்டே: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷூடன் வாட்ச்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்த சம்யுக்தா, அப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் தாராளமாக நடித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவ்:பெங்களூருவில் வசித்து வரும் இவர், கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் படத்திலும், ரணா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு இப்போது எந்த படங்களும் இல்லாததால், பட வாய்ப்புக்காக, சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி போட்டோஷூட்: முன்பெல்லாம், பிரபலமாக வேண்டும் என்றால் படாதபாடு படவேண்டி இருந்தது. ஆனால், இப்போது ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆகிவிடுவதால், கவர்ச்சியை கையில் எடுத்த சம்யுக்தா ஹெக்டே, தினம் தினம் கலர் கலர் பிகினியில் தாறுமாறாக வளைத்த வளைத்து போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
டாப்லெஸ் வீடியோ: தற்போது இவர் மேலாடை இல்லாமல் கண்ணாடி முன் நின்று கொண்டு, தனது கட்டுமஸ்தான வளைவுகள் தெரியும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, உங்கள் உடல் உங்கள் சொத்து, நீங்கள் எந்த சமூக ஊடகத்திற்கும் சொந்தமானவர் இல்லை. பெண்களாகிய நாம் வலுவாகவும், சுதந்திரமாகவும், நம்பிக்கையுடனும் இருக்க அனுமதிக்கப்படுகிறோம். வலிமையானது ஆண்பால் அல்ல, அது பெண்ணியம் அல்ல. வலிமை, தன்னம்பிக்கை தான் பெண்மையின் உருவகம் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











