Samyuktha: தனுஷ் அந்த விஷயத்தில் சூப்பர்.. சம்யுக்தா மனம் திறந்த பேட்டி!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக சம்யுக்தா உள்ளார். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடம் தனக்கு என்று ஒரு இடத்தை வைத்திருக்கும் இவர், எந்தவிதமான ரோலாக இருந்தாலும் அதில் நேர்த்தியாக நடித்து பெயர் எடுத்து வருகிறார். அண்மையில் ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், முன்னணி நடிகர்களுடன் நடித்தது குறித்து பேசி உள்ளார்.

நடிகை சம்யுக்தா: அதில், ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான குணம் கொண்டவர்கள், அனைத்து நடிகர்களும் வேறுபட்டவர்களவே உள்ளனர். நான் தனுஷூடன் வாத்தி படத்தில் இணைந்து நடித்தேன். அவர் மிகவும் இயல்பான நடிகராக இருக்கிறார். ஆனால், திரையில்
மிரட்டி விடுவார். அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன் என்றார். தொடர்ந்து, பவன் கல்யாணுடன் நடித்தது குறித்து பேசிய சம்யுக்தா, பவன் கல்யாணை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மக்கள் அவர் மீது வைத்து இருக்கும் அன்பும், மக்கள் மீது இவர் காட்டும் அன்பு வார்த்தையால் விவரிக்க முடியாதவையாக இருக்கும். அதே போல பாலைய்யாவுடன் பணியாற்றியது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அந்த படத்தின் படிப்பு தளத்தின் என் மனநிலை வேறுபட்டதாகவே இருந்தது. நாம் என்ன படத்தில் பணிபுரிகிறோம் என்பதைப் பொறுத்தே நம் மனநிலையில் இருக்கும்.

Samyuktha Dhanush interview
Photo Credit:

அழுத்தமான ரோல்: பல பட வாய்ப்புகள் என்னை தேடி வந்தாலும், அந்த கதையில் என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன். நான் இதுவரை நடித்து இருக்கும் அனைத்து கதாபாத்திரமும் எனக்கு முக்கியத்துவம் கொண்ட ரோலாகத்தான் இருக்கும், அப்படிப்பட்ட கதையில் தான் நான் நடித்து இருக்கிறேன். தொடர்ந்து பேசிய சம்யுக்தா, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பென்ஸ்' படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்துப் பேசுகையில், "நான் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) உடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானது, அதே நேரம் மாறுபட்டதாகவும் இருக்கும் என்றார். அதிரடித் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.இந்த செய்திக்கு நச்சுனு தலைப்பு தரவும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X