Samyuktha Honey Moon: சம்யுக்தாவின் ஹனிமூன் போட்டோஸ் பாருங்க.. திகிலா இருக்கே பாஸ்!
சென்னை: நடிகையும், மாடலுமான சம்யுக்தா சண்முகநாதனும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தும் கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இத்திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிய விழாவாக நடைபெற்றது. ஹனிமூன் சென்றுள்ள இவர்கள் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்கள்.
பொறியியல் பட்டதாரியான சம்யுக்தா, மாடலிங் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். பின்னர் திரையுலக வாய்ப்புகள் கிடைத்ததும் நடிகையாக மாறினார். அவர் 'ஷீ', 'காஃபி வித் காதல்', 'காரி', 'குரு மூர்த்தி', 'வாரிசு', 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். எனினும், அவர் நடித்த சில திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், சம்யுக்தா சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தொழிலதிபர் கார்த்திக் என்பவரை சம்யுக்தா திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தான். சில காலம் சுமூகமாக சென்ற அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் தலைதூக்கின. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்பார்த்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக அந்த விரிசல்கள் முற்றி, விவாகரத்தில் முடிந்தது.
அவர்களது பிரிவுக்குப் பின்னணியில் பல கதைகள் கூறப்பட்ட நிலையில், ஒரு பேட்டியில் சம்யுக்தா தன் தரப்பு விளக்கத்தை அளித்தார். "எனது கணவருக்கும் துபாயில் ஒரு பெண்ணுக்கும் இடையே உறவு இருந்திருக்கிறது. அந்த உறவில் அவர் நான்கு வருடங்கள் இருந்தார். கொரோனா லாக்டவுன் சமயத்தில் தான் நடந்தது," என்று அதில் அவர் குறிப்பிட்டார். சட்டப்பூர்வமாக கடந்த ஆண்டே அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து: கார்த்திக்கைப் பிரிந்த பிறகு, சம்யுக்தா தனது மகன் ராயனை வளர்ப்பதிலும், திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடர்வதிலும் கவனம் செலுத்தினார். அப்போதுதான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த்துடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
திருமணம்: சம்யுக்தா - அனிருதாவின் காதலுக்கு இரு குடும்பத்திலிருந்தும் உடனடியாகச் சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து சென்னையில் எளிய முறையில் அவர்களது திருமணம் நடைபெற்றது. இருதரப்புக்கும் நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
ஹனிமூன்: தற்போது ஹனிமூன் சென்றுள்ள சம்யுக்தா, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதாவது அடர்ந்த வனப்பகுதியில் ஜீப் சவாரி செய்தபோது, புலி, சிங்கம், யானை உள்ளிட்ட வன விலங்குகளை படம் பிடித்துள்ளனர். மேலும் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து, இதுதான் எனக்கு மிகவும் பிடித்த விலங்கு என்றும் கேப்ஷன் இட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும், இவ்வளவு திகிலாக இருக்கும் இடத்திற்கா நீங்கள் ஹனி மூன் செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











