சம்யுக்தாவுக்கு நடந்த 2வது திருமணம்.. மகனை எப்படி ரெடி செய்கிறார் பாருங்க.. மகனும் செம ஹேப்பி
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் நேற்று இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். மணமுடித்த இரண்டு பேருக்கும் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.
பொறியியல் பட்டம் முடித்த சம்யுக்தா சண்முகநாதன் மாடலிங்கில் ஜொலித்துக்கொண்டிருந்தார். பிறகு அவருக்கு திரைத்துறை கதவு திறக்க நடிகையாக மாறினார். அதன்படி ஷீ, காஃபி வித் காதல், காரி, குரு மூர்த்தி, வாரிசு, மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றுத்தரவில்லை. தொடர்ந்து சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருமணம் செய்துகொண்ட சம்யுக்தா: இதற்கிடையே கார்த்திக் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்கும் மகனும் பிறந்தான். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சின்ன சின்ன விரிசல்கள் வந்தன. காலப்போக்கில் இந்த விரிசல் சரியாகிவிடும் என்று குடும்பத்தினரும், அவரது நண்பர்களும் நினைத்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த விரிசல் விரிவாகி விவாகரத்தில் முடிந்தது.

என்ன காரணம்?: இரண்டு பேருக்கும் நடந்த விவாகரத்து பற்றி பலரும் பல கதைகளை சொல்ல ஆரம்பித்த சூழலில் ஒரு பேட்டியில் பேசிய சம்யுக்தா, "எனது கணவருக்கும் துபாயில் ஒரு பெண்ணுக்கும் இடையே உறவு இருந்திருக்கிறது. அந்த உறவில் அவர் நான்கு வருடங்கள் இருந்தார். கொரோனா லாக் டவுன் சமயத்தில்தான் நடந்தது" என்று கூறினார். அவர்களுக்கு கடந்த வருடம்தான் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கிள் டூ மிங்கிள்: கார்த்திக்கை பிரிந்த பிறகு மகனை வளர்ப்பதிலும் திரைத்துறையில் தனது கரியரை வளர்ப்பதிலும் கவனம் செலுத்திவந்த அவருக்கு; முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அனிருதா ஸ்ரீகாந்த்துடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்தான். சம்யுக்தா - அனிருதாவின் காதலுக்கு வீட்டில் உடனடியாக சம்மதம் கிடைத்தது.
சிம்ப்பிளாக நடந்த திருமணம்: அதனையடுத்து நேற்று சென்னையில் இரண்டு பேருக்கும் சிம்ப்பிளாக திருமணம் நடந்தது. இதில் இருதரப்புக்கும் நெருக்கமான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் அவர்களது திருமணம் தொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. அதில் தனது மகன் ராயனை படுக்கையிலிருந்து எழுப்பிவிடும் சம்யுக்தா, அவருக்கு வேட்டி கட்டிவிட்டு ரெடி செய்கிறார். அவரது மகனும் ரெடியான பிறகு மண கோலத்தில் இருக்கும் தனது தாய்க்கு அன்போடு முத்தமும் கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பார்க்கவே செம க்யூட்டாக இருக்கு என வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











