என்னங்க ஸ்டார் பிஷ்சை கொண்டு போய் அங்க வச்சிருக்கீங்க..? பிரபல ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல ஹீரோயினின் வித்தியாசமான ஹேர்ஸ்டலை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

சிம்பு, சினேகா நடித்த சிலம்பாட்டம் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்தவர், சனாகான். இதில் இவர் நடிப்பு கவனிக்கப்பட்டது.

பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார்.

காதலித்து வந்தார்

காதலித்து வந்தார்

சமீபத்தில், விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார். இந்தி பிக்பாஸ் 12 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக பிரபலமடைந்தார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.

உண்மை தெரிய வந்தது

உண்மை தெரிய வந்தது

இந்நிலையில், மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று திடீரென்று தெரிவித்தார், சனா கான். இது பரபரப்பானது. அவர் கூறும்போது, நான் மெல்வினை முழுமனதாகக் காதலித்தேன். 8 மாதங்கள் பழகிய பிறகு மெல்வின், சிலரை ஏமாற்றுவதாக ஒருவர் எனக்கு தெரிவித்தார். அவர் பற்றிய உண்மை தெரிய வந்ததால் காதலை முறித்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

தவறானவர்

தவறானவர்

இதையடுத்து இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜாடையாக மோதிக்கொண்டனர். பின்னர் நேரடியாகவே சண்டையிட்டனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது அம்மா, மெல்வினை பார்த்ததுமே தவறான ஆள் என்று சொன்னதாகக் கூறி இருந்தார். கடவுள் அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றினார் என்றும் தெரிவித்திருந்தார்.

இப்படித்தான் தயாராவேன்

இந்நிலையில் கொரோனாவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் சனாகான், அவ்வப்போது போட்டோ பதிவிட்டு வருவது வழக்கம். இப்போது அவர் பதிவிட்டுள்ள போட்டோவில், ஸ்டைலாக இருக்கிறார். அவர் நடித்து வரும் 'ஸ்பெஷல் ஆப்ஸ்' வெப் சீரிஸ்க்கான டயலாக் பேப்பர் ஒரு கையில் இருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கு முன்னும் இப்படித்தான் தயாராவேன் என்று கூறியுள்ளார் சனா.

ஸ்டார் பிஷ்

ஸ்டார் பிஷ்

இதில் அவர் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக இருக்கிறது. இதனால் ஏராளமான ரசிகர்கள் இந்தப் போட்டோவை லைக் செய்துள்ளனர். பலர் கமென்ட் அடித்துள்ளனர். அதில் ஒரு ரசிகர், 'இதெல்லாம் சரி, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு எவ்வளவு டொனேஷன் கொடுத்தீங்க? என்று கேட்டுள்ளார். இன்னொருவர், 'என்னங்க ஸ்டார் பிஷ்சை தூக்கி மண்டையில வச்சிருக்கீங்க? இருந்தாலும் நல்லாதான் இருக்கு?' என்று தெரிவித்துள்ளார்.

பார்ட்டி உண்டா?

பார்ட்டி உண்டா?

மற்றொருவர் கிண்டலாக, பிரேக்கப் ஆனது ஆகிப்போச்சு... அதுக்கு ஏதும் பார்ட்டி உண்டா? என்று கேட்டு கலாய்த்துள்ளார். ஒரு ரசிகர், இதென்ன ஹேர் ஸ்டைல்?' என்றும் இன்னும் சிலர், ஸ்பெஷல் ஆப்ஸ் தொடரில் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த தொடரின் ஒவ்வொரு காட்சியிலும் அருமையாக வருகிறீர்கள் என்று சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X