எதையாவது உளறிட்டு இரு... சனம் ஷெட்டியை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ் !

சென்னை : சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே நடக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல திரை பிரபலங்களும் சீன பொருட்களை தடைசெய்ய வேண்டும் எனவும்

சீனப் பொருட்கள் உபயோகிக்க வேண்டாம் எனவும் கூறி வரும் வேளையில் நடிகை சனம் ஷெட்டியும் தனது பங்கிற்கு ஒரு பேட்டியின் மூலம் சொல்லியிருந்தார்.

இந்த செய்தி பிரபல பத்திரிக்கையில் வெளியான நிலையில் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நானும் சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்பதை தெரிவித்து வந்தார்.

சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த சிலர் அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில் பலரும் விடாமல் கலாய்த்து வருகின்றனர்.+

மாடலிங் துறையில்

மாடலிங் துறையில்

தமிழ் மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வரும் நடிகை சனம் ஷெட்டி. நடிகை ஆவதற்கு முன் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாளராக இருந்து பின் அங்கிருந்து மாடலிங் துறையில் வெற்றிகரமாக கால்பதித்து வந்த இவர் இன்று வரை பல படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

சினிமா கம்பெனி

சினிமா கம்பெனி

தமிழில் ஆர்.பார்த்திபன் நடித்த அம்புலி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சனம் ஷெட்டி அதை தொடர்ந்து மலையாளத்திலும் சினிமா கம்பெனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவ்வாறு தமிழ் மலையாளம் என ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் அறிமுகமான புதிதிலேயே நடித்திருந்த இவர் இன்று வரை பல படங்களில் நடித்து நம் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

தயாரிப்பாளராக

தயாரிப்பாளராக

இவ்வாறு பல படங்களில் நாயகியாகவும், சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனம் ஷெட்டி முதல்முறையாக தயாரிப்பாளராக உருவெடுத்து மேகி என்ற படத்தையும் தயாரித்து வந்தார். தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமந்துடு என்ற வெற்றிப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக

நீண்ட நாட்களாக

பல மொழிகளில் நடித்து வந்த சனம் ஷெட்டி மாடலும் மற்றும் நடிகருமான தர்சன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். பின் தர்ஷன் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார். பிக் பாஸ் இல்லத்தில் உடன் இருந்த நடிகை ஷெரினுடன் காதல் கிசுகிசு இவர் பெயர் அடிபட்டு வந்தது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

தர்ஷன், ஷெரின் காதல் கிசுகிசு விவகாரம் சனம் ஷெட்டியின் வாழ்க்கையில் பூதாகரமாக வெடித்து இருவரும் ஏற்கனவே திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையிலும் இந்த கிசுகிசு காரணங்களால் தங்களது காதல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

நெட்டிசன்கள் கலாய்த்து

நெட்டிசன்கள் கலாய்த்து

தர்ஷன் விஷயத்தின் மூலம் மிகவும் பிரபலமான சனம் ஷெட்டி அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் இவர் எந்த கருத்து சொன்னாலும் அதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கருத்திற்கும் பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தன்னுடைய ரசிகர்களை

தன்னுடைய ரசிகர்களை

சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே நடக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல திரை பிரபலங்களும் சீன பொருட்களை தடைசெய்ய வேண்டும் எனவும் சீனப் பொருட்கள் உபயோகிக்க வேண்டாம் எனவும் சொல்லி வரும் வேளையில் சனம் ஷெட்டியும் தனது பங்கிற்கு ஒரு பேட்டியின் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.

உறுதியாக உள்ளேன்

உறுதியாக உள்ளேன்

இந்த செய்தி பிரபல பத்திரிக்கையில் வெளியான நிலையில் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நானும் சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்பதை தெரிவித்து வந்தார்.‘ சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த சிலர் அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில் பலரும் இப்படியே எதையாவது உளறிட்டு இரு என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X