Sanam shetty: எல்லை மீறும் கவர்ச்சி உடையில் சனம் ஷெட்டி.. முகம் சுளிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது இவருக்கு கைவசம் எந்த படமும் இல்லாததால், படவாய்ப்பை பெற இணையத்தில் கண்டபடி கவர்ச்சி காட்டி வருகிறார். அதைப்பார்த்த இணையவாசிகள் இதெல்லாம் தேவையா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சனம் ஷெட்டி 2012 இல் வெளியான 'அம்புலி' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் அவர் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், செல்வந்தன், கதகளி, வால்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனை காதலித்ததாகவும், இருவருக்கும் இடையே ரகசிய நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் மீடியாக்கள் முன் குற்றம் சாட்டி இருந்தார்.

Sanam shetty Bigg Boss

மிரட்டுகிறார்: இதற்கு பதில் அளித்த தர்ஷன், சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான். அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது என்றார். மேலும், சனம் ஷெட்டி, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென டார்ச்சர் செய்ததாகவும், தற்கொலைக்கு செய்து கொள்வேன் என மிரட்டினார் என்று தர்ஷன் கூறியது பெரும் புயலை கிளப்பியது.

பிக் பாஸ் சீசன்: இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த வீட்டில் பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி சண்டை முட்டிக்கொண்டு அந்த வீடே ரணகளமானது. இருப்பினும் சனம் ஷெட்டிக்கு மக்களின் ஆதரவு இருந்ததால் அந்த வீட்டில் 63 நாட்கள் இருந்தார். தற்போது வனிதா விஜயகுமார் போல, பிக்பாஸ் சீசன்களை ரிவ்யூ செய்தார். அண்மையில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரதீப் ஆண்டனி எதிராக பெண்கள் உரிமை எழுப்பிய விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

ஓவர் கவர்ச்சி: சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி காட்டாமல் இருந்த சனம் ஷெட்டி தற்போது ஓவராக கவர்ச்சி காட்டி வருகிறார். அண்மையில் இவர் நீச்சல் குளத்தில் வெள்ளை பிகினியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார். தற்போது, தனது தொடை அழகை காட்டும் கிளாமர் போட்டோ ஒன்றை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பல ரசிகர்கள், படவாய்ப்புக்காக இப்படியா என்றும், என்ன இதெல்லாம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X