கமிஷனர் அலுவலகத்தில் விஜய்யின் முன்னாள் ஹீரோயின் சங்கவி - திடீர் பரபரப்பு
சென்னை: விஜய்யின் முன்னாள் கதாநாயகியான சங்கவி நேற்று திடீரென சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சினிமா நட்சத்திரங்கள் இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில் இருப்பதை விட அதிக நேரம் கமிஷனர் அலுவலகத்தில்தான் உள்ளனர். தினசரி திரைப்பிரபலங்கள் பேட்டிய அளித்தபடி காட்சி தருகிறார்கள்.

எல்லா பஞ்சாயத்தும் இங்கேதான்
கற்பழிப்பு முயற்சி, கள்ளக் காதல், செக் மோசடி, திருட்டு விசிடி, தாலிகட்டாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்தவர்கள் என சினிமா பிரபலங்களில் பலதரப்பு மோசடிகளின் பஞ்சாயத்து அலுவலகமாகக் காட்சி தருகிறது கமிஷனர் அலுவலகம்.
நேற்றும் அதற்கு முன் தினமும் மூன்று பிரபல நடிகைகள் கமிஷனர் அலுவலகம் வந்தனர்.

ஸ்ரீப்ரியா - லிஸி
நேற்று முன்தினம் நடிகைகள் ஸ்ரீபிரியாவும் லிஸியும் கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனரைச் சந்தித்துவிட்டுப் போனார்கள். எதுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது, 'ஒன்றுமில்லை... சும்மா பார்த்துவிட்டுப் போக வந்தோம்... செய்தி ஒன்றுமில்லை.. நாங்கள் யார் மீதும் எந்தப் புகாரும் தரவில்லை," என்றனர்.
ஏதோ சொந்தக்காரரைப் பார்க்க வந்த தோரணையில் பதில் சொல்லிவிட்டுப் பறந்தார்கள் இருவரும்!

சங்கவி
நேற்று நடிகை சங்கவி திடீரென்று ரகசியமாக கமிஷனர் அலுவலகம் வந்தார். ஆஹா, ஏதோ பெரிய வழக்கு விவகாரம் போலிருக்கிறது, என அவரைப் பின்தொடர்ந்தனர் மீடியாக்காரர்கள்.

துப்பாக்கி லைசென்ஸ்
அவரிடம் என்ன புகார், எதற்காக வந்தீர்கள்? என மீடியா துளைக்க, அவரோ, 'அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க... என்னோட துப்பாக்கி லைசென்சை புதுப்பிக்க, அதற்கான விண்ணப்பம் தர வந்துள்ளேன்," என்று அவர் தெரிவித்தார்.
இவர்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி மனு பெற்று அனுப்பும் கமிஷனர், சாதாரண மக்களுக்கு மட்டும், பிஆர்ஓவை விட்டு மனு வாங்கச் சொல்கிறாரே! - இது மீடியாக்காரர்கள் அப்போது அடித்த கமெண்ட்.


Click it and Unblock the Notifications











