அப்படிப்பட்ட விஜய்யை நான் பார்த்ததே இல்லை.. கனடாவில் அவர் மனைவி.. நடிகை சங்கீதா ஓபன் டாக்

சென்னை: நடிகராக பயணத்தை தொடங்கி இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார் விஜய். தேர்தலுக்கு முன்னதாக அவர் மீது மனைவி சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்தும் கோரியிருந்தார். இதன் காரணமாக பெண்களிடம் இருந்த விஜய்யின் இமேஜ் நொறுங்கிவிட்டதாக பலர் கணித்தார்கள். ஆனால் விஜய் வெற்றி பெற்றதற்கு அந்த பெண்களின் வாக்குகளும் முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அதோடு மட்டுமின்றி, விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார். பிள்ளைகளும் சங்கீதாவுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் தமிழ்நாடு குடும்பங்களிடம் விஜய் பாதுகாத்து வைத்திருந்த நல்ல இமேஜ் சங்கீதா மூலம் உடைக்கப்பட்டது; கண்டிப்பாக தேர்தலில் இது பெரிய அளவில் ப்ளே செய்யும் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள்.

Actress Sangeetha Opens Up About Her Bond With Vijay Amid Divorce Buzz
Photo Credit:

அதெல்லாம் ஒன்றும் இல்லை: ஆனால் தேர்தல் முடிவுகளோ வேறு மாதிரி வந்தன. மொத்தம் 108 தொகுதிகளில் முதலில் வென்ற தவெக; அடுத்ததாக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை பெற்றது. விஜய்யும் முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார். மேலும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க; இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக வெற்றி பெற்றுவிட்டது. எனவே இனிமேல் விஜய் ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கருதப்படுகிறது.

Also Read
இன்னொரு திருமணமோ, கணவரோ முக்கியம் இல்லை.. சம்யுக்தா சண்முகநாதன் அதிரடி பேச்சு
இன்னொரு திருமணமோ, கணவரோ முக்கியம் இல்லை.. சம்யுக்தா சண்முகநாதன் அதிரடி பேச்சு

சங்கீதா விவகாரம் என்ன நிலைமை?: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விஜய் - சங்கீதா மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம். எனவே அடுத்த மாதம் நடக்கவிருக்கும் விசாரணையின்போது விஜய் காணொலியில் ஆஜராவார் என்று தெரிகிறது. கண்டிப்பாக அன்றைய தினம் இவர்கள் இரண்டு பேருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துவிடும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் பிரபல நடிகை சங்கீதா சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று திடீரென இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "நானும், விஜய்யும் பல வருடங்களாக பழக்கம். கிட்டத்தட்ட 25 வருடங்கள் இருக்கும். விஜய் ரொம்பவே ஜாலியான ஆள். செமயாக காமெடி செய்வார். நான் எப்போதுமே அமைதியான விஜய்யை பார்த்தது இல்லை. வாலு விஜய்யைத்தான் பார்த்திருக்கிறேன். ரொம்பவே ஃபன்னான ஆள்.

கனடாவில் பழக்கம்: கனடாவில் நானும், விஜய்யும் ஒரு டான்ஸ் செய்தோம். அப்போதிருந்துதான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் விஜய்க்கும், சங்கீதாவுக்கும் திருமணம் நடக்கவில்லை. அவரும் அந்த ஷோவை பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போதே சங்கீதாவும்கூட எனக்கு பழக்கம்" என குறிப்பிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X