அடையாளம் தெரியாமல் மாறிய 90s க்ரஷ் சங்கவி.. கருப்பு நிறப் புடவையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
சென்னை: 90களில் தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் தான் நடிகை சங்கவி. பல ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தக இவர், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் சங்கவீ வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.
நடிகை சங்கவி: ஈஎன்டி மருத்துவரான சங்கீதா தளபதி விஜய்யுடன் இணைந்து ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே எனத் தொடர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதேபோல் அஜித்துடன் இணைந்து அமராவதி படத்திற்கு ஜோடியாக முதல் முதலில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படம் சங்கீதாவிற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததால், ரசிகர்களின் ஃபேவரைட் '90s க்ரஷ்'ஆக மாறினார். அதன் பின் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, தற்போது ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

அடையாளம் தெரியலையே: சினிமாவை விட்டு விலகி சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சங்கீதா, மற்ற நடிகைகளை போல, சோசியல் மீடியாவில் எப்போதாவது தனது படங்களைப் பகிர்ந்து வருகிறார. அந்த வகையில் அவர் பகிர்ந்து இருக்கும் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், அழகிய டிசைனர் வேலைப்பாடுகள் கொண்ட கருப்பு நிறப் புடவையில் குடை பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புடவைக்கு மேட்சிங்காக வளையல்கள், ஜிமிக்கி அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், அட நம்ம சங்கவியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என கேட்டு வருகின்றனர். சங்கவி உடல் எடை கூடி, சற்று பருமனாக இருந்தாலும், அவரது முகத்தில் இருக்கும் அந்த பழைய வசீகரமும், கியூட்டான சிரிப்பு இன்னும் அப்படியே இருப்பதாக 90ஸ் கிட்ஸ் உருகி கமெண்ட் செய்து வருகின்றனர். நீண்ட நாட்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சங்கவி, தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாளையத்து அம்மன் என்ற ஆன்மீக தொடரில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications