twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜேம்ஸ்பாண்டு படம்னாலும் சத்தியமா 'அப்டி' நடிக்க மாட்டேன்... நடிகை சஞ்சனா கல்ரானி!

    கன்னட படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாக வெளியான செய்தி பற்றி நடிகை சஞ்சனா கல்ரானி விளக்கம் அளித்துள்ளார்.

    |

    Recommended Video

    இளையதளபதி சீரியலில் சஞ்சனா கல்ரானி!- வீடியோ

    சென்னை: கன்னட படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாக வெளியான செய்தி தொடர்பாக நடிகை சஞ்சனா கல்ரானி ஒன்இந்தியாவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    ஒரு காதல் செய்வீர் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சனா கல்ரானி. இவர் நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி ஆவார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் தலைகாட்டாத சஞ்சனா, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பிரம்மாண்டமான வரலாற்று தொடரான இளைய தளபதியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    Actress Sanjana explains about her nude video issue

    இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த சஞ்சனாவை சந்தித்தோம். முகம் முழுக்க புன்னகையுடன் நம்மை வரவேற்ற அவரிடம் பேசியதில் இருந்து...

    'ஒரு காதல் செய்வீர்' படத்துக்கு பிறகு தமிழ் பக்கமே ஆள காணோமே என்னாச்சு...

    அந்த படம் நான் ரொம்ப சின்ன வயசா இருக்கும் போது செய்தது. அதற்கு பிறகு கன்னடா, தெலுங்கு, மலையாளம் என பிசியாகிவிட்டேன். அதனால் தமிழ் பக்கம் மீண்டும் வர முடியவில்லை. மற்றபடி நடிக்க கூடாது என்பதெல்லாம் இல்லை. தமிழில் நடிக்க நான் எப்போதுமே ரெடி.

    உங்க சகோதரி நிக்கி கல்ரானி தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்காங்க. அதனாலதான கொஞ்சம் பொறுமையா இருக்கீங்களோ...

    அப்படி எல்லாம் இல்ல. இரண்டு பேருமே நடிப்பு துறையில் தான் இருக்கிறோம். அதனால எங்களுக்குள் போட்டி எல்லாம் இல்ல. அவங்க வளர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இளையதளபதி சீரியல்ல லேடி பாகுபலின்னு பில்டப் கொடுக்குறாங்களே... கொஞ்சம் ஓவரா இல்ல இது...

    உண்மையிலேயே இந்த சீரியல் சாதாரண விஷயம் இல்ல. பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனமாக அர்க்கா தான் இந்த சீரியலையும் தயாரிக்குது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 8 மொழிகளில் இந்த சீரியல் உருவாகுது.

    வரலாற்று தொடரான இதில் நான் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக குதிரையேற்றம், வாள் சண்டைனு பல விஷயங்கள் கற்றுகொண்டேன். அடிப்படையில் நான் ஒரு யோகா கலை நிபுணர் என்பதால் இது கொஞ்சம் எளிமையாக இருந்தது. இந்த சீரியல் மூலம் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    உங்க சீரியலுக்கு இளையதளபதி பெயர் வெச்சிருங்காகளே... தமிழ்நாட்டுல இளையதளபதினா யாருன்னு தெரியுமா...

    (சிரிக்கிறார்) நிச்சயமா இந்த டைட்டில் கெடச்சது மகிழ்ச்சியான விஷயம். இப்போ நான் இளையதளபதியில் நடிக்கிறேன். விரைவில் நான் இளையதளபதியுடன் நடிப்பேன். எனக்கு எல்லாருடனும் நடிக்க வேண்டும் என்று ஆசை.

    தண்டுபாளையா படத்தில் நீங்கள் நிர்வாணமாக நடித்ததாக வீடியோ கசிந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன?

    நான் நிச்சயமாக இந்த படத்தில் நிர்வாணமாக நடிக்கவில்லை. அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நான் ஆடை அணிந்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒரு நபர் அதை வீடியோ எடுத்து, கழுத்துக்கு கீழ் பிளர் செய்து வெளியிட்டுவிட்டார். அதனால் தான் அது ஆடை இல்லாமல் நடித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு எங்களிடம் இருந்த ஒரிஜினல் வீடியோவை வெளியிட்டு சூழலை சமாளித்தேன். ஜேம்ஸ் பாண்டு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கூட நான் நிர்வாணமாக நடிக்க மாட்டேன்.

    English summary
    In an exclusive interview to Oneindia, actress Sanjana Galrani shared her experience in working in television serial Ilayathalabathi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X