சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை : நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனார்.
கொரோனா அறிகுறி இருந்தால் சோதனை மேற்கொண்டதாகவும் சோதனையில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் சஞ்சான கல்ராணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இரவு ஊரடங்கு
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி
மேலும், மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. சில இடங்களில் தடுப்பூசிகள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனைவரும் பாதிப்பு
அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவின் 2-வதுஅலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் செந்தில், சுந்தர் சி, அதர்வா, பாலிவுட்டில் அமீர், ரன்பீர் கபூர், ஆலியா பட், சோனு சூட் போன்றோர் தொற்றால்பாதிக்கப்பட்டனர்.

தொற்று உறுதி
இந்நிலையில், நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான பெங்களூரைச் சேர்ந்த சஞ்சனா கல்ராணி தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட அவர் அனைவரும் பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா வராமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணியுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











