வவ்வால் போல தலைகீழா தொங்கிய சஞ்சனா.. பார்த்து விழுந்துடாதீங்க என பதறும் பேன்ஸ்!

சென்னை : கவர்ச்சி நாயகியான சஞ்சனா சிங் தனது வீட்டு மொட்டை மாடியில் தினம்தினம் உடற்பயிற்சி செய்யும் புகைப் படத்தையும்,வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சியான வேடங்களில் நடிக்க கொஞ்சம்கூட இப்பொழுது இருக்கும் நடிகைகள் சலிப்பதில்லை. கவர்ச்சியை மிகவும் தாராளமாகவும் அதை பிடித்த ஒன்றாக காட்டிவருகின்றனர் .

அந்த வகையில் கவர்ச்சி புயல் என்று பெயர் வாங்கிய சஞ்சனா சிங்கும் , இந்த ஊரடங்கு தொடங்கிய நாள் முதலாய் தனது உடற்பயிற்சி செய்ய வீடியோக்களையும் அன்றாடம் வெளியிட்டு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறார்.

கவர்ச்சி மிகவும் பிடிக்கும்

கவர்ச்சி மிகவும் பிடிக்கும்

தனது அழகை எப்போதும் காட்டும் சஞ்சனா, ரசிகர்களின் விருப்பம் என்று தெரிந்து கவர்ச்சியை மிகவும் விரும்பி காட்டி வருகிறார் . இந்த லாக் டவுன் காரணமாக ஜிம் அனைத்தும் மூடப்பட்டதால் , உடற்பயிற்சி எப்படி எல்லாம் செய்யலாம் என்று இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு பல தரமான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

யாரும் முயற்சிக்க வேண்டாம்

யாரும் முயற்சிக்க வேண்டாம்

வீட்டு கதவில் அந்தரத்தில் தொங்கிய படியும், வாட்டர் கேனை வைத்துக் கொண்டும் இவர் செய்த சாகசங்கள் பலே. இதனை அனைத்தும் யாரும் ட்ரை செய்ய வேண்டாம் என்று எப்பொழுதும் கூறி வருவார். புசு புசு தேகத்துடன் அழகாக இருந்த கவர்ச்சி புயல் சஞ்சனா, ஐந்து மாதத்திற்குள் சரசரவென்று தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தேகத்திற்கு மாறிவிட்டார்.

திரும்பி திரும்பி காட்டி

திரும்பி திரும்பி காட்டி

இன்றும் சற்றும் சளைக்காத சஞ்சனா மேலும் தன் உடல் எடையை குறைக்க தினம் தினம் வித விதமான உடற்பயிற்சிகளை தனது வீடு மொட்டைமாடியில் இருந்து செய்து கொண்டிருக்கிறார். பயிற்சி செய்யும் பொழுதும் கவர்ச்சியை விட்டுவைக்காத சஞ்சனா முன்னும் பின்னும் திரும்பி திரும்பி தன் ரசிகர்களை கிறங்கடிக்க செய்கிறார். இவர் செய்யும் சேட்டைகளை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

மனஉளைச்சல் போக்க

மனஉளைச்சல் போக்க

எப்பொழுதும் கிளாமராகவும் சுற்றி திரியும் சஞ்சனா திடீரென்று முருகன் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் அதிலும் பலர் தயவுசெய்து வேற பாட்டுக்கு டான்ஸ் ஆடுங்க என்றும், வேற பாட்டே உங்களுக்கெல்லாம் கிடைக்கலையா என்று கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்தனர். மன அழுத்தத்திலிருந்து நீங்குவதற்காக அவ்வப்போது இந்த மாதிரி குத்தாட்டம் போட வேண்டும் என்று பலருக்கு பதிலளித்தார்.

கெஞ்சும் ரசிகர்கள்

கெஞ்சும் ரசிகர்கள்

சமீபகாலமாகவே உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகின்றது. பல வகையான புஷ்-அப்களையும், தலைகீழாக தொங்கியபடி யும், கம்பியில் தொங்கிய படியும் பல வீடியோக்களை தனது வலைத்தளபக்கத்தில் வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்களும் பல கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். பல ரசிகர்கள் இவர் மீது இருக்கும் அக்கறையில் தயவு செய்து ஏதாவது தரையில் பெட் போட்டுக் கொள்ளுங்கள் தெரியாமல் கீழே விழுந்தால் கூட அடிபட்டு விடும் அல்லவா என்று அவரை கெஞ்சி வருகின்றனர். இது சஞ்சனா தானா என்று அவர்கள் கேட்கும் அளவிற்கு ஒல்லியாக மாறி அவ்வப்போது செல்பி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவரை ஊக்குவிக்கும் வகையாக ரசிகர்களும் அவருக்கு பல லைக்ஸ்களையும் , கமெண்ட்ஸ்களையும் கொட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X