மொட்டைதலையுடன் சஞ்சனா கல்ராணி… என்ன ஆச்சு…ஏன் இந்த முடிவு !

சென்னை : நடிகை சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு கன்னட திரையுலகை புரட்டி எடுத்த போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்.

அதில் இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சஞ்சனா கல்ராணி

சஞ்சனா கல்ராணி

பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையான சஞ்சனா கல்ராணி, சில மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா, டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது கற்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார் சஞ்சனா கல்ராணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

மொட்டைதலையுடன்

மொட்டைதலையுடன்

இந்நிலையில், சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். அந்த புகைப்படத்தின் கேப்ஷனில், தான் இதை ஏன் செய்தேன் என்பதை கூறியுள்ளார். அதில், நான் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறன். இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.

கடவுளுக்கு நன்றி

கடவுளுக்கு நன்றி

நான் பார்ப்பவரின் கண்களுக்கு அழகாக தெரிகிறேன், அதனால் நான் என் தலைமுடியை முழுவதுமாக தியாகம் செய்துவிட்டேன். நான் கடவுளிடம் வற்புறுத்திய மனதை முழுவதையும் நிரப்பினேன். பல சிரமங்களைக் கடந்து ... வாழ்க்கை மீண்டும் அழகாக இருக்கிறது. எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்திற்கு என்னால் போதுமான அளவு கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். என் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டேன் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

ஏன் என்ன ஆச்சு

ஏன் என்ன ஆச்சு

சஞ்சனா கல்ராணியின் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஏன் இந்த முடிவு என்றும்...ஏன் என்ன ஆச்சு என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X