அலேக்காக தூக்கி போட்டு.. குஸ்தி சண்டை..பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ !

மும்பை : நடிகை சன்யா மல்கோத்ரா குஸ்தி சண்டை போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

நடிகை சன்யா மல்கோத்ரா குஸ்தி சண்டை போடும் வீடியோ

நடிகர் ஆமிர் கான் உடன் தங்கல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சன்யா மல்கோத்ரா, இந்தியில் தற்போது பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

அந்த வீடியோவை பார்த்த பலரும் அம்மாடியோவ் என வாயை திறந்தவாறு பார்த்தும், ரசித்தும் சன்யா மல்கோத்ராவை பாராட்டியும் வருகின்றனர்.

முன் அனுபவம் இல்லை

முன் அனுபவம் இல்லை

ஹிந்தியில் முதன் முதலில் தங்கல் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சன்யா மல்கோத்ரா இதற்கு முன் குஸ்தி சண்டையைப் பற்றி எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத இவர் இந்த படத்திற்காக சிறப்பாக குஸ்தி சண்டை கற்று கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளார்.

சிறப்பு பயிற்சி செய்தேன்

சிறப்பு பயிற்சி செய்தேன்

மேலும் தங்கல் படத்தில் நடித்த இவரிடம் குஸ்தி சண்டையை எப்படி கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு " நான் பல குஸ்தி வீடியோக்களை பார்த்து ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன், ஒவ்வொரு குஸ்தி சண்டை வீரர்களும் ஒவ்வொரு தந்திரங்களையும் வித்தையையும் பயன்படுத்தி வந்தனர் என்பதை பலரின் வீடியோக்களின் மூலமும், பலரிடம் கேட்டும் தெரிந்து கொண்டேன். மேலும் ஒவ்வொரு குஸ்தி சண்டை வீரரின் அசைவுகளையும், அவர்களின் நடை பாவனைகளையும் உற்று நோக்கி பின் அதற்காக தனியாக சிறப்பு பயிற்சி எடுத்தும் வந்தேன்" என சன்யா தனது அனுபவத்தை கூறியிருந்தார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

ஒரு குஸ்தி சண்டை போடும் வீரர்கள் எவ்வாறு எல்லாம் இருப்பார்கள் என அணுஅணுவாக பார்த்து கவனித்து பின் உள்வாங்கி நடித்த இவர் தங்கல் படத்தின் மூலம் இந்திய திரைத் துறையில் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த படம் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில் அப்போது முதலிடத்தில் இருந்து வந்தது. மேலும் இந்த படம் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நடன அமைப்பாளர்

நடன அமைப்பாளர்

இவ்வாறு தங்கல் படத்தின் மூலம் அமீர்கான் உடன் நடித்திருந்த இவர் மீண்டும் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற அமீர் கான் படத்தில் "செக்ஸி பார்பிலே" என்ற பாடலுக்கு நடன அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் நடனத்தில் கை தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவலை போக்கியது

ஆவலை போக்கியது

தங்கல் வெற்றியை தொடர்ந்து இவரை மேலும் பல படங்களில் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவர் இரண்டு வருடம் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இடைவெளிவிட்டு இருந்தார். இந்த இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த பதாக்கா, பதாய் ஹோ மற்றும் போட்டோகிராபர் போன்ற இவரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் ஆவலை போக்கியது. இந்நிலையில் இவர் ஆயுஷ்மான் குரானா உடன் நடித்த பதாய் ஹோ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பதாய் ஹோ ஒரு மலையாள படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

மிரண்டு போயுள்ளனர்

மிரண்டு போயுள்ளனர்

பல வெற்றி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வெறித்தனமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் குஸ்தி சண்டை காலத்திற்குள் ஒருவரை புரட்டி புரட்டி எடுப்பது போல இருந்த அந்த வீடியோவில் சன்யா மல்கோத்ரா அந்த நபரை அலேக்காக தூக்கி மெத்தை மேல் வீசுவது போன்று இருந்த அந்த வீடியோவை பார்த்த பலரும் மிரண்டு போயுள்ளனர்.

மறக்க முடியாத

மறக்க முடியாத

இந்நிலையில் இந்த வீடியோ தங்கல் படத்தில் நடிப்பதற்காக குஸ்தி சண்டை பயிற்சியின் போது எடுத்த வீடியோ என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். மேலும் இது மறக்க முடியாத தருணம் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார் சன்யா மல்கோத்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X